எதிர்வரும் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவதனை அனுமதிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளர் ஓருவரை நிறுத்தி தேர்தலில் வெற்றியீட்ட முயற்சித்து வரும் நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
பொது வேட்பாளராக போட்டியிடுவது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் இரண்டு சந்திப்புக்கள் நடத்தப்பட்டுள்ளன.
ரணில், பொது வேட்பாளராக போட்டியிட்டால் ஆதவரளிக்க முடியாது என இரண்டு சந்திப்புக்களின் போதும் சம்பந்தன் அறிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற சந்திப்புக்களின் போது பொது வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவது பயனளிக்காது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடுவதற்கு ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இது குறித்து ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment