ஏ.எஸ்.எம்.இர்ஷாத்-
வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம் உட்பட வரட்சி மற்றும் தண்ணீர்ப் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு உதவ அனர்த்த முகாமைத்துவ அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய அம்பாறை, அநுராதபுரம், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், மொனராகலை, முல்லைத்தீவு பொலன்னறுவை, திருகோணமலை, வவுனியா ஆகிய மாவட்டங்களிலுள்ள மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்காக அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த அரசாங்க அதிபர்களிடம் இன்று வெள்ளிக்கிழமை தண்ணீர் பவுசர்கள் கையளிக்கப்பட்டது.
இவற்றை கையளிக்கும் நிகழ்வு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் கொழும்பு-7 சிலிடா நிறுவத்தில் நடைபெற்றது.
அமைச்சின் செயலாளர் திருமதி எஸ்.எம்.மொஹம்மட் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.