நிந்தவூர் பழைய மாணவர்கள் சங்கம் இரண்டாம் கட்ட ஒன்றுகூடல்



முஹம்மட் ஜெலீல்-

திட்டமிட்டபடி நிந்தவூர் அல்- அஷ்ரக் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் இரண்டாம் கட்டஒன்றுகூடல் 10-08-2014 நடைபெற்றது இதில் ஒரு புதிய ஒளி தெரிகிறது நம்பிக்கையை கை விடாதுதொடர்வோம்,ஆரம்பத்தில் கருத்து வேறுபாடு வரும், கருத்துப்பரிமாற்றங்களுக்குள்ளானது குறித்த தரப்பினர்OBA ஐ கட்டி எழுப்புவதை மட்டும் அதிகம் கிலாகித்தனர், இருந்தபோதிலும் எமது கனவு அல்- அஷ்ரக் UNION இந்த அமைப்பின் நோக்கம் இது எவ்வாறு இயங்க விருக்கின்றது இதன் உட்கட்டமைப்பு எப்படிஇருக்கும் இதன் பலன்கள் என்ன என்று கூட்டத்தில் சகோதரர் வாகிர், அவர்களுடன் இணைந்து . முஹம்மட் இஸ்மாயில் உமர் அலி. அவர்களும் விளங்கினார்.

இக் கூட்டத்திற்கு வருகைதந்தவர்களில்

Dr. மக்சூன் மேர்சா எந்திரி இஸ்மாயில், Mr.ரசூல் சேர். முன்னாள் பல்கலைக்கழக பீடாதிபதி, Mr.அப்துல் நிசாம், மாகான கல்விப்பணிப்பாளர், அதிபர், Mr.சத்தார்சேர் OBA பிரதித்தலைவர்,(பதிவாளர்)

ஆகியோர் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர்.கிட்டத்தட்ட மூன்று மணித்தியாலங்கள் நீடித்த இக் கூட்டத்தின் இறுதியில் பழைய மாணவர் சங்கத்தை புதுப்பிப்பது சம்பந்தமான முயற்சி எடுக்கப்படவேண்டும் என்று கூறப்பட்டது.

பாடசாலையில் இந்த அமைப்பின் ஒரு காரியாலயம் பாடசாலை வேளைகளில் இயங்க வைப்பதற்கான திட்டமும் முன்மொழியப்பட்டது. இந்தக்காரியாலயம் முழுமூச்சாக உயிரோட்டமுள்ளதாக இருக்கும்மென்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் குறித்த அல்- அஷ்ரக் UNION அங்குரார்ப்பணம் செய்யப்படவேண்டியதன் அவசியத்தை மாகான கல்விப்பணிப்பாளர் உட்பட பெரும்பான்மையானர் ஏற்றுக்கொண்டு, இது வரவேற்கத்தக்கதொரு விடயம் முயற்சியை கைவிடாது தொடர்ந்து முன்னெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து குறித்த அல்- அஷ்ரக் UNION இற்கான யாப்பு உட்பட ஏனைய திட்ட வரைவுகளை ஒரு வார காலத்தினுள் எழுதி, அதன்பின்னர் உடனடியாக ஒரு பொதுக்கூட்டம் கூடி அந்தக்கூட்டத்தில் இந்த அல்- அஷ்ரக்UNION இற்கான நிருவாகம் தெரிவு செயவதற்குமான நடவடிக்கைகளை முன்னெடுக்க இடைக்கால குழு ஒன்று தெரிவுசெய்யப்பட்டது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :