வரட்சியால் பாதிக்கப்பட்ட இடங்களிலுள்ள சிறு குளங்களை புனரமைப்பு வேலைத் திட்டம் வாகரையில்

த.நவோஜ்-
ரட்சியால் பாதிக்கப்பட்ட இடங்களிலுள்ள சிறு குளங்களை புனரமைத்தல் எனும் வேலைக்கான பணம் வேலைத் திட்டம் வாகரை கதிரவெளி கிராம சேவையாளர் பிரிவிற்குட்ட சாளம்பைக்கேணி குளத்தில் செவ்வாய்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வு வாகரை பிரதேச செயலாளர் செல்வி.எஸ்.ஆர்.இராகுலநாயகி தலைமையில் ஆரம்பமானது. இதன்போது இவர் வேலைக்கான பணம் வேலைத் திட்டமானது வரட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் ஒரு அபிவிருத்தியை (குளம் புனரமைத்தல்) மேற்கொள்வதுடன், இதன்மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு அவர்கள் அன்றாட ஜீவனோபாயத்தை ஓளரவு ஈடுசெய்ய முடியுமென குறிப்பிடதோடு, இவ்வேலைத் திட்டம் தொடர்பாகவும் விளக்கமளித்தார்.

வாகரை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் வே.நவிரதன், அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.கருணைநாதன், தொழில் நுட்ப உத்தியோகத்தர் ஆர்.ஜெயசோபராஜ் ஆகியோர் இது தொடர்பாக மேலதிக விளக்கமளித்தனர்.

இதன்போது வாகரை பிரதேச செயலாளர் செல்வி.எஸ்.ஆர்.இராகுலநாயகி, பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் வே.நவிரதன், அபிவிருத்தி உத்தியோகத்தர், தொழில் நுட்ப உத்தியோகத்தர், கிராம சேவை உத்தியோகத்தர், பொருளாளதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கமலநல சேவை திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர், வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டு பற்றைக் காடாக காணப்பட்ட சாளம்பைக்கேணி குளத்தை மரங்களை வெட்டி புனரமைப்புச் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்போது கிராம சேவை உத்தியோகத்தர் எஸ்.யோகசாகரன், பொருளாளதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான பொ.ரவேந்திரன், எஸ்.ரவிக்குமார், கமலநல சேவை திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.பிராசாந்த், வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர் எஸ்.யூட் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :