பிரித்தானியாவில் சிறுமி ஒருவருக்கு மருத்துவர் பரிந்துரைத்த மருந்து கொடுத்ததால் அலர்ஜி ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்த மேசி மார்ஷ் (2) என்ற சிறுமிக்கு மருத்துவரின் பரிந்துரைப்படி நூரோபென் என்ற மருந்து கொடுக்கபட்டுள்ளது. சிறுமி இந்த மருந்தை உட்கொண்ட சில மணிநேரங்களிலேயே இவருக்கு முகத்தில் புண் மற்றும் கொப்பலங்கள் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேசி 10 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தற்போது உயிர் தப்பியுள்ளார். இவர், தற்போது உயிர் பிழைத்திருந்தாலும், கண் பார்வை இழந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், மேசி உயிர்பிழைத்தது பெரிய அதிசயம் என்றும் இந்த மருந்தினால் இப்படி ஒரு ஆபத்து ஏற்பட்டிருப்பது இதுவே முதல் முறை எனவும் கூறியுள்ளார்.

0 comments :
Post a Comment