முஸ்னீ இப்னுமுகம்மதுநாபி -
மருதமுனை செஸ்டோ ஸ்ரீலங்கா தன்னார்வதொண்டு நிறுவனத்தின் துணை நிறுவனமான'செஸ்டோ சமய கலாச்சாரப் பேரவையின்'ஏற்பாட்டில் காத்தான்குடிமற்றும் மருதமுனை இறை இல்ல பணியாளர்களுக்கிடையிலான சிநேக பூர்வ கலந்துரையாடலொன்று மருதமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள நூர் ஜூம்ஆபள்ளிவாசலில் செஸ்டோசமயகலாச்சாரப் பேரவையின் தவிசாளரும்,அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரி விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் எப்.எம். அகமதுஅன்சார் மௌலானா (நளீமி) அவர்களின் தலைமையில் நேற்று (06.08.2014 ஹிஜ்ரி 1435 ஷவ்வால் 09) இரவு 10.15 மணியளவில் நடைபெற்றது.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் தலைவர் மௌலவிஏ.எல். ஆதம்லெப்பை (பலாஹி) அவர்களின் தலைமையிலும்,செயலாளர் மௌலவி எஸ்.எம்.எம். முஸ்தபா (பலாஹி) அவர்களின் வழிகாட்டலிலும் இலங்கையின் தெற்குப் பிரதேசத்திற்கு காத்தான்குடி இறை இல்ல பணியாளர்கள் நோன்புப் பெருநாளுக்குப் பின்னரான சுற்றுலா மேற்கொள்வதற்கு மருதமுனையூடாக சென்ற சந்தர்பத்திலேயே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காத்தான்குடி மருதமுனை இறை இல்ல பணியாளர்களுக்கிடையில் ஒரு இணைப்புப் பாலத்தினை ஏற்படுத்தி அவர்களுக்கு மத்தியில் எதிர்காலத்தில் இரு தரப்பும் ஒன்றிணைந்து சகலவிடயங்களிலும் செயற்படுவது எனவும்,காத்தான்குடியை மையமாகக் கொண்டு கிழக்குப் பிரதேச அனைத்து ஊர்களிலும் இவ்வாறான கிளை சங்கங்களை உருவாக்கி இறை இல்ல பணியாளர்களின் சுகதுக்க செயற்பாடுகளில் ஆரோக்கியத்துடன் செயற்பட்டு அவர்களின் வாழ்வாதாரதேவைகள் மற்றும் ஏனைய மருத்துவ தேவைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் செஸ்டோ கலாச்சாரப் பேரவையின் தவிசாளர் அஷ்ஷெய்க் எப்.எம்.ஏ. அன்சார் மௌலானாநளீமி, செஸ்டோ ஸ்ரீலங்காவின் பொதுச்செயலாளர் உதவிவிரிவுரையாளர் ஏ.ஜே.எல். வஸீல் , மருதமுனை முஅத்தின் அதிகாரிமார் சங்கசெயலாளர் ஜனாப் எம்எம். அபூபக்கர், காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் செயலாளர் மௌலவி எஸ்.எம்.எம். முஸ்தபா பலாஹி ஆகியோர் உரையாற்றினார்கள்.
அத்துடன் காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் 15வது வருடபூர்த்தியை முன்னிட்டு வெளியிடப்பட்ட சிறப்புமலர் 2014 யை உத்தியோகபூர்வமாக செஸ்டோ ஸ்ரீலங்காவின் தலைவர் நாபி எம் முஸ்னீ அவர்களிடம் சம்மேளனத்தின் நிருவாக சபை உறுப்பினர்கள் கையளித்தனர்.
செஸ்டோ மகளிர் சங்கத்தின் இணைப்பாளரும் இளைஞர் சேவைஅதிகாரியுமான எம்.ரி.எம். ஹாறுன் அவர்களும், செஸ்டோ கலாச்சாரப் பேரவையின் செயலாளரும்,மருதமுனை ஸகாத் நிதியத்தின் தலைவருமான அஷ்ஷெய்க் பைசல் கியாஸ் பலாஹிஅவர்களும் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் காத்தான்குடி பள்ளிவாயல்களில் கடமைபுரியும் கதீப்மார், இமாம்கள்,முஅத்தின்மார் மற்றும் மருதமுனை பள்ளிவாயல்களில் கடமைபுரியும் முஅத்தின்மார்,அதிகாரிமார் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துப் பரிமாற்றங்களை பரிமாறிக்கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment