த.நவோஜ்-
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இராணுவத்தின் 233வது படைப்பிரிவின் உதவியுடன் பல்வேறு உதவித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
அந்த வகையில் கொழும்பு ஸ்ரீ புத்த அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு ஸ்ரீ சம்போதி விகாரையி;ன் விகாராதிபதி பூச்சிய சம்ம தரனாலகம குசலதம்மா ஹிமி அவர்களின் தலைமையில் வந்த தேரர்களால் வியாழக்கிழமை வாகரை மகா வித்தியாலயத்தில் வைத்து வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீர்த்தாங்கிகளும் குடிநீர் போத்தல்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் இராணுவத்தின் 233வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் நந்த கத்துருசிங்க, இராணுவத்தின் ஒன்பதாவது கெமுனு படைப்பிரிவின் தளபதி லெப்டினன் கேர்ணல் ராஜகுரு பண்டார, வாகரை பிரதேச செயலாளர் செல்வி.எஸ்.ஆர்.இராகுலநாயகி, வாகரை பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி பாலித ஜயரத்ன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் பத்து கிராம சேவகர் பிரிவுகள் வரட்சியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இராணுவத்தின் உதவியுடன் கொழும்மில் இருந்து வந்த ஸ்ரீ புத்த அமைப்பினால் 118 நீர்தாங்கிகளும், அறுபத்தெட்டாயிரம் லீட்டர் குடிநீரும் வழங்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிராம சேவகர் பிரிவு தோறும் பகிர்ந்தளிக்கப்படும் என்று வாகரை பிரதேச செயலாளர் செல்வி.எஸ்.ஆர்.இராகுலநாயகி தெரிவித்தார்.
0 comments :
Post a Comment