ஆசியாவின் இன்னொரு அதிசயம்! பொழுது போக்கு, பரிசுகள் வழங்க 20 மில்லியன்

பொழுது போக்கு நிகழ்ச்சிகள் மற்றும் பரிசுகள் வழங்கல்களுக்காக பிரதமர் தி.மு ஜயரத்ன சுமார் 20 மில்லியன் ரூபாவினை செலவு செய்துள்ளார் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்தளவு தொகையை கடந்த ஒரு வருடத்தில் அவர் செலவிட்டுள்ளார்.

இருப்பினும் அவர் எவ்வாறான பொழுது போக்கு விடயங்களுக்கு இந்தப் பெருந்தொகை பணத்தைச் செலவிட்டுள்ளார் என்பது தொடர்பில் குறித்து தெரிவிக்கப்படவில்லை.

இது தவிர, அவரது அலுவலக காகிதாதிகள் மற்றும் தேவைகளுக்காக கடந்த வருடம் ஜனவரி முதல் டிசம்பர் வரை 6,679,032 ரூபாவினை செலவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஆண்டில் மட்டும் 6156 அரச அதிகாரிகள் வெளிநாட்டுப்ப யணங்களை மேற்கொண்ருந்தனர். வெளிநாட்டு விஜயங்களை செய்துள்ளனர். இதற்கான அனுமதியையும் பிரதமர் அலுவலகமே வழங்கியிருந்தது.

உயர் கல்வி அமைச்சின் கீழ் 1,995 வெளிநாட்டுப் பயணங்கள்,
மின்சக்தி, எரிசக்தி அமைச்சின் கீழ் 450 வெளிநாட்டுப் பயணங்கள்,
தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைச்சின் கீழ் 282, வெளிநாட்டுப் பயணங்கள், சுற்றாடல் அமைச்சின் கீழ் 279 வெளிநாட்டுப், பயணங்கள்,வெளிவிவகார அமைச்சு 72 வெளிநாட்டுப் பயணங்கள்,
முதலீட்டு ஊக்விப்பு அமைச்சின் கீழ் 54 வெளிநாட்டுப் பயணங்கள்,
பெற்றோலியத்துறை அமைச்சின் கீழ் 04 வெளிநாட்டுப் பயணங்கள், ஆகியனவும் கடந்த வருடம் அனுமதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப்
பயணங்களில் அடங்கின்றன.

தமிழில் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
ஆங்கிலத்தில் நன்றி சிலோன் டுடே
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :