த.நவோஜ்-
வாகரை பிரதேச அபிவிருத்தித் திட்டம் தொடர்பான 2014ம் ஆண்டுக்கான மீளாய்வும், 2015ம் ஆண்டுக்கான திட்டம் தொடர்பான கலந்துரையாடல் வாகரை பிரதேச வேல்ட் விஷன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் புதன்கிழமை பாசிக்குடா உஹாவே ஹோட்டலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது வேல்ட் விஷன் நிறுவனமானது 2014ம் ஆண்டு மேற்கொண்ட சுகாதாரம், ஊட்டச்சத்து (சத்துணவு), நீரும் சுகாதாரமும், உணவுப் பாதுகாப்பு போன்ற செயற்பாடுகளின் போது ஏற்பட்ட தடைகளும், சவால்களும் மற்றும் அதன் அமைவுகள் தொடர்பாகவும், 2015ம் ஆண்டுக்கான திட்டங்கள் தொடர்பாகவும் இக்கலந்துரையாடல் மூலம் வெளிக் கொண்டுவரப்பட்டது.
இதன்போது வைத்திய அதிகாரி எ.எல்.எப்.றஹ்மான், வைத்திய அதிகாரி அச்சுதன், வாழைச்சேனை வைத்திய அதிகாரி திஷாநாயக, வாகரை வைத்திய அதிகாரி பவித்திரா ஏனைய பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள், வேல்ட் விஷன் நிறுவன உத்தியோகத்தர்களான கிருஸ்ரி ஜெயானந்தன், மகிந்தன் ராஜேந்தின், லோகிதராஜா, வாகரை பிரதேச சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன், வாகரை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வாகரை பிரதேச சபை உத்தியோகத்தர்கள், இளைஞர் சம்மேளன உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment