சலீம் றமீஸ்-
அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பின்தங்கிய எல்லைக் கிராமங்களான ஹிளுறு நகர், இலுக்குச் சேனை பிரதேசத்தில் வாழ்ந்து வரும் மக்களின் நன்மை கருதி 10 மில்லியன் ரூபா செலவில் உள்ளக வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
ஹிளுறு நகர் உள்ளக வீதிகளுக்கான ஆரம்ப நிகழ்வு ஹிளுறு நகர் பள்ளிவாசல் தலைவர் நூர்த்தீன் தலைமையில் இடம் பெற்றது. இதில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும் கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும், கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவை பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
அமைச்சருடன் அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.றாஸீக், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் பொதுமக்கள் தொடர்பு அதிகாரி எஸ்.எம்.சபீஸ், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அக்கரைப்பற்று பிரதம பொறியியலாளர் அமிருல் பாரி, நிறைவேற்றுப் பொறியியலாளர் கே.எல்.எம்.இஸ்மாயில், பிரதேச சபை உறுப்பினர் இல்யாஸ் உட்பட முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வின் போது அக்கரைப்பற்று ஹிளுறு நகர் மத்திய வீதி, நூர்த்தீன் வீதி, இலுக்குச் சேனை அல் - ஹூதா வீதி, அல்- ஹூதா குறுக்கு வீதி போன்ற வீதிகள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment