பாராளுமன்ற உறுப்பினரும், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அனுரகுமார திசாநாயக்கவின் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
பொறுப்பற்ற வகையில் வாகனத்தை செலுத்தினார் என்ற குற்றச்சாட்டில் அவரை கைதுசெய்துள்ளதாகவும், இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.
நேற்று அனுரகுமார திசாநாயக்க பயணித்த கெப்ரக வாகனமும் எதிரேவந்த டிப்பர் ரக வாகனமும் இரத்தினபுரி- ஹொரணை வீதியில் கிரியுல்ல எனுமிடத்தில் ஒன்றுடன் ஒன்று மோதி நேற்றுவிபத்துக்குள்ளானது இதில் அனுரகுமார திசாநாயக்க சிறு காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் சிறு காயமடைந்த சாரதி, இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையிலேயே இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
டெ

0 comments :
Post a Comment