பழுலுல்லாஹ் பர்ஹான்-
முஸ்லிம்களின் புனித பெருநாள் தினங்களில் ஒன்றான ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் இன்று 29 செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாணத்தில் பரவலாக அமைதியான முறையில் அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு'காத்தான்குடி, ஏறாவூர், வாழைச்சேனை, ஒட்டமாவடி, கல்முனை மருதமுனை, சாய்ந்தமருது, நிந்தவூர், ஒலுவில் பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில், சம்மாந்துறை, மாளிகைக்காடு, இறக்காமம் மூதூர், கிண்ணியா, போன்ற பிரதேசங்களில் உள்ள கடற்கரை மைதானங்கள், விளையாட்டு மைதானங்கள் போன்ற திறந்த வெளியில் விஷேட பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கமும் முறையே இடம்பெற்றது.
பெருநாள் தொழுகை திடலில்தான் தொழவேண்டும் என்ற நபிவழிக்கேற்ப 29-07-2014 இன்று செவ்வாய்க்கிழமை காலை காத்தான்குடி இஸ்லாமிக் சென்டரின் ஏற்பாட்டில் காத்தான்குடி கடற்கரை அன்வர் பள்ளிவாயல் முன்றலில் புனித ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகை இடம்பெற்றது.
இங்கு பெருநாள் தொழுகையையும் குத்பாப் பேருரையையும் மௌலவி அஷ்ஷெய்க் எம்.எச்.எம். அஸ்பர் ஹசன் (பலாஹி) நிகழ்த்தினார்.
இதில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினர்களான எம்.எம்.அப்துர் றஹ்மான்,எம்.பி.எம்.பிர்தௌஸ் நளீமி உட்பட ,உலமாக்கள்,அரசியல்வாதிகள்,ஊர்பிரமுகர்கள் உட்பட பல ஆயிரக்கணக்கான ஆன்கள் பெண்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment