அமைச்சர் றஊப் ஹக்கீம் பதவி விலகல் அவசியமற்றது.


எம்ஏ.தாஜகான்-

டந்த 10.07.2014ம் திகதிய விடிவெள்ளியிலும் அதன் சகோதரப் பத்திரிகையான 11.07.2014ம் திகதிய வீரகேசரியிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரான எம். அப்துல் மஜீத் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கௌரவ அமைச்சர் றஊப் ஹக்கீம் அவர்களைப் பற்றி விடுத்திருந்த அறிக்கையில் தெரிவித்திருந்த கருத்துக்கள் சம்பந்தமாக , முற்போக்கு முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் சட்டத்தரணி எம்.இஸ்மாயில் ஆதம்லெப்பை அவர்கள் தனது மறுப்பு அறிக்கையினை தெரிவிக்கையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் தனக்கும் தலைவர் றஊப் ஹக்கீமுக்குமிடையில் ஏற்பட்ட சில பிணக்குகள் தொடர்பான தகவல்கலைத் தெரிவித்திருந்த ஜனாப் எம். அப்துல் மஜீத் அவர்கள் அவற்றுடன் அமைச்சர் றஊப் ஹக்கீம் தனது அமைச்சர் பதவியை இராஜினமா செய்யவில்லை என்றும் , அவரை முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைமை என்று இனியும் தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்திருந்தார். ஜனாப் அப்துல் மஜீத் அவர்கள் தனது சொந்த அரசியல் நடவடிக்கைகளுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் தனது பதவியை இராஜினமா செய்யாமைக்கும் முடிச்சுப் போட்டு , அவர் அமைச்சப் பதவியை இராஜினமாச் செய்யாமையினால்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து தான் விலகிக் கொள்ளத் தீர்மானித்துள்ளதாகவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றஊப் ஹக்கீம் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்வதென்பது இன்றைய சூழ்நிலையில் அவருடைய கட்சி மாத்திரம் சம்பந்தப்பட்ட ஒரு விவாகாரமில்லை. அத இலங்கை வாழ் முழு முஸ்லிம் சமூதாயமும் சம்பந்தப்பட்ட ஒரு விடயம் என்பதால் , அது அக்கட்சியின் திடீர் தீர்மானத்தினால் செயற்படுத்தும் விடயமாகத் தெரியவில்லை. எட்டு பாராளுவமன்ற உறுப்பினர்களையும் , பதினொரு மாகாண சபை உறுப்பினர்களையும் , நூற்றுக்கணக்கான உள்@ராட்சி மன்றங்களின் உறுப்பினர்களையும் சமூகத்தின் கணிசமான ஆதரவையும் கொண்ட கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருப்பதால் முஸ்லிம்கள் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இக்கால கட்டத்தில் அமைச்சரின் இராஜினாமா என்பது எமது சமூகத்தில் செயற்பாடு சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படத்தக்கூடிய ஒரு நடவடிக்கையாகும். எனவேதான் அமைச்சரின் இராஜினாமா விடயத்தில் சமூக நன்மையை உத்தேசித்து முற்போக்கு முஸ்லிம் காங்கிரஸ் தனது அபிப்பிராயத்தையும் இத்தால் அறிக்கையிடுகின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீடம் கௌரவ அமைச்சரின் இராஜினமா தொடர்பாக நிறைவேற்றிய தீர்மானம் எவ்விதமான நிபந்தனைகளின் மீது நிறைவேற்றப்பட்டதென்பதை உயர்பீட உறுப்பினர் எம். அப்துல் மஜீத் தனது அறிக்கையில் வெளிப்படுத்தவில்லை. அத்தீர்மானம் உயர்பீட உறுப்பினர் அப்துல் மஜீத் அவர்களுடைய அரசியல் உயர்வுக்காக எடுக்கப்பட்ட தீர்மானமா? ஏன்பதும் தெரியவில்லை. மேலும் கௌரவ றஊப் ஹக்கீம் அமைச்சர் பதவியை இராஜினமாச் செய்யாவிட்டால் முஸ்லிம் சமூகத்திற்காகக் கட்சியிலிருந்து தான் வெளியேறுவதாக ஏலவே ஜனாப் அப்துல் மஜீத் கட்சியின் உயர்பீடத்தில் முன்னெச்சரிக்கை எதையும் விடுத்திருந்தாரா என்பது பற்றியும் தெரிவிக்கப்படவில்லை.

எவ்வாறெனினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கௌரவ றஊப் ஹக்கீம் அவர்களின் இராஜினமா சில வாரங்களுக்கு முன்னர் முஸ்லிம் வட்டாரங்களில் ஒரு பேசு பொருளாக இருந்தது. உயர் பீட உறுப்பினர் அப்துல் மஜீத் அவர்களின் அறிக்கையினால் அவ்விடயம் அவருடைய தனிப்பட்ட அக்கறைகளுடன் சம்பந்தப்பட்ட ஒரு விடயமாக இப்போது காட்டப்படடுள்ளது. 

இவ்விடயத்தில் முற்போக்கு முஸ்லிம் காங்கிஸ் வெளிப்படுத்துவது யாதெனில் இன்று இலங்கையில் முஸ்லிம் சமூகம் முற்றிலும் எதிர்பார்த்திராத ஒரு நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஜுன் நடுப்பகுதியில் மேற்கில் நடந்த அசம்பாவிதங்கள் முஸ்லிம் சமூகத்தின் உச்சந் தலையில் ஓங்கி அடித்தது போன்ற நிலையை ஏற்படுத்தியது. கடந்த இரண்டு வருடங்களாக ஆங்காங்கே எமது பள்ளிவாசல்களுக்கு ஏற்பட்ட அனர்த்தங்கள் இன்று முழு முஸ்லிம் சமூகமும் முடங்கிக் கிடக்கும் அளவிற்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளமை வேதனைக்குரியதாகும். இதற்கான பரிகாரம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தை மாற்றுவதல்ல. அத் தலைமைத்துவத்தின் முறையான செயற்பாட்டிற்கும் , சமூக நலன் நோக்கிய பயணத்திற்கும் நமது பங்களிப்பை செய்ய வேண்டியதே இன்றைய தேவையாகும்.

எமது தலைவர்கள் மத்தியில் கடந்த வாரம் முக்கியமான ஒரு மாற்றம் ஏற்பட்டுள்து. ஐந்து கட்சிகளின் முஸ்லிம் தலைவர்கள் ஒன்றுபட்டு நாட்டின் தலைவரான ஜனாதிபதிக்கு கோரிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். இது ஒரு நல்லதொரு நடவடிக்கை என முற்போக்கு முஸ்லிம் காங்கிரஸ் கருதுகின்றது. தேசிய ஐக்கியத்தை பலப்படுத்துவதற்கான எவ்வகையிலான செயற்றிட்டங்களுக்கும் நாம் உதவுவதற்குத் தயாராகவிருக்கின்றோம். 

வன்முறைகளற்ற சுதந்திரமான சமூகமொன்றை உருவாக்குவதற்கும் அதன் மூலம் நாட்டின் அபிவிருத்திக்கும், முன்னேற்றத்திற்கும், பங்களிப்பதற்கும் நாம் தயாராகவுள்ளோம். எமக்கிடையே நல்லுறவை மேம்படுத்துவதற்கான காலகட்டம் இதுவாகும் என்று ஒருமித்து அக் கோரிக்கையில் தெரிவித்துள்ளனர். 

அத்துடன், இலங்கை முஸ்லிம்கள் எமது நாட்டிற்கெதிராகவோ அல்லது எந்தவொரு குறிப்பிட்ட தொகுதி மக்களுக்கெதிராகவோ பயங்கரவாதத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுவதை ஒரு நாளும் ஆதரிக்கவோ அனுமதிக்கவோ மாட்டார்கள் என்பதை எமது ஐந்து முஸ்லிம் அமைச்சர்களும் மேலும் ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளார்கள். இலங்கை முஸ்லிம்களின் வழி சாந்தியும் சமாதானமும் தழுவிய வழியாகும் என்பதை ஜனாதிபதிக்கும் நாட்டுக்கும் தெளிவு படுத்தியுள்ளனர்.

இவற்றில் கைச்சாத்திட்டவர்களான கௌரவ அமைச்சரகள் றஊப் ஹக்கீம், ஏ.எச். எம். பௌஸி, ஏ.எல்.எம். அதாவுல்லா, பசீர் சேகுதாவுத், றிசாட் பதியுதீன் ஆகியோர். இன்றைய சூழ்நிலையில் முஸ்லிம் கூட்டுத் தலைமைத்துவம் ஒன்றை உருவாக்குவதற்கு மிகவும் பொருத்தமானவர்கள் என்று முற்போக்கு முஸ்லிம் காங்கிரஸ் கருதகின்றது. இக் கூட்டுத் தலைமைத்துவத்தில் கௌரவ அமைச்சர் றஊப் ஹக்கீம் வழங்கக்கூடிய பங்களிப்பு அளப்பரியதாகும் என்றும் நாம் நம்புகின்றோம். வெவ்வேறு திசைகளில் வேறுபட்ட இலக்குகளுடன் தனித்தனியாகச் செயற்பட்ட நமது தலைவர்கள் ஒன்றுபட்டுச்செயலாற்றுவதற்கு கறுப்பு ஜுன் அசம்பாவிதம் இன்று வழிவகுத்துள்ளது. வெண்ணெய் திரண்டுவரும் வேளையில் தாளியை உடைப்பது போல முஸ்லிம் சமூகத்தின் பேச்சாளர்களுள் ஒருவராக விளங்கப்போகின்ற அமைச்சர் றஊப் ஹக்கீம் அவர்களை பதவி விலகச் சொல்லி அறிக்கை விடுவது சமூகத்தின் நன்மைக்காகவா? அல்லது சுயலாபத்திற்காகவா? என்ற வினா முற்போக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

(நாட்டில் இன்று ஏற்பட்டிருக்கும் சங்கடமான நிலைமைக்கு பெரும்பான்மை இனத்தவர் மத்தியில் முஸ்லிம்களைப் பற்றி உருவாகியிருக்கும் உருவாக்கப்பட்டிருக்கும் சந்தேகங்கள் மற்றும் பிழையான விளக்கங்கள் காரணமாக இருக்கலாம் என்றும் கருத வேண்டியுள்ளது.)

முஸ்லிம்கள் பற்றிய சந்தேகம் இஸ்லாத்தைப் பற்றிய தவறான எண்ணம் என்பவற்றைப் போக்குவதற்கும் மேற்குறித்த கூட்டுத் தலைமை தமது தகுதியையும் பதவி நிலையையும் பயன்படுத்தி பெரும்பான்மை மக்களின் இதயத்தை வெல்வதற்கும் முறையான செயற்றிட்டம் ஒன்றை வகுத்துச் செயற்படவேண்டியும் உள்ளது. இதற்கு சமூகத்தில் உள்ள புத்திஜீவிகள் , மார்க்க வல்லுனர்கள் அதை செயற்;படுத்தக்கூடிய திட்டம் ஒன்றை வகுத்தல்; வேண்டும். இவ்வாறான செயற்திட்டத்திற்கு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மிதவாதிகளான அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் , எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் , உறுப்பினர்கள் என்போருடனும் பேச்சுவார்த்தைகள் நடாத்தி நமது நாட்டிலே முஸ்லிம்களின் இருப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வது உடனடித் தேவையாகும்.

இது போன்ற நடவடிக்கைகளைச் செயற்படுத்த வேண்டிய இச் சந்தரப்பத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் இராஜினாமாச் செய்ய வேண்டும் என்று கோரிக்கையை முஸ்லிம்களின் பாதுகாப்பைப் பற்றி கூடுதலாகச் சிந்திக்க வேண்டிய ஜனாப் அப்துல் மஜீத் முன்வைப்பது நியாயமற்றதொன்றாகும். என்று எமக்குத் தெரிகின்றது.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எட்டு பாராளுவமன்ற உறுப்பினர்களுடனும் , மாகாண சபை உறுப்பினர்களுடனும் நூற்றுக்கணக்கான உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களுடனும் செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஒர் அரசியல் இயக்கத்தின்; தலைவர் அவரை நியாயபூர்வமான காரணம் இல்லாமல் பதவி விலகக் கோருவது அவருடைய அரசியல் நடவடிக்கைக்கு சேறு பூசும் வகையில் அறிக்கைகளை விடுப்பது இன்றைய நிலையில் பொருத்தமற்றதொன்றாகும். மேற்கில் களுத்துறை மாவட்ட முஸ்லிம்கள் கண்ணீரும் கம்பலையுமாக இருக்கும் காலகட்டத்தில் முஸ்லிம்கள் மத்தியில் கட்சி அரசியலை முன்னிறுத்தி அறிக்கைகளை விடுப்பது தவிர்க்கப்படல் வேண்டும்.அமைச்சரவை என்பது நாட்டின் நிர்வாக ரீதியான விடயங்கள் குறித்து தீர்மானிக்கின்ற முக்கிய நிறுவனம். எனவே இப்படியான அவையில் இருந்து கொண்டுதான் பெரும்பான்மை இனத்தின் தலைவர்களுடன்; கலந்து முஸ்லிம்களின் கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் சொல்லலாம். அதனால் (நமக்கு முழுமையான நன்மை கிடைக்காவிட்டாலும்) ஆபத்துக்களைத் தடுக்க உதவி கோரலாம், மறுப்புத் தெரிவிக்கலாம், முஸ்லிம்களின் அபிலாசைகளை, யதார்த்தத்தை முன்வைக்கலாம். இது இவ்வாறு இருக்க சமூகம் பற்றிய அக்கறையில்லாமல் , சமூகத்தைப் பற்றிய சிந்தனையில்லாமல், பொறுப்பு வாய்ந்த தலைவர் ஒருவரை சமூகப் பயனில்லாதவர்கள் பதவி விலகச் சொல்லவது வேடிக்கையானதாகும்.

பேரினவாதத்தின் ஜுன் மாதத் தாக்குதல்கள் நமது சமூகத்தின் பொருளாதாரத்தையும், கலாசார சுதந்திரத்தையும் பலவீனப்படுத்தியுள்ளதோடு, முஸ்லிம்கள் மத்தியில் உளரீதியான தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் மாதங்களில் விபரீதமாக எதுவும் நடக்காது என்பதற்கான உத்தரவாதத்தை எவராவது தந்துள்ளதாக தகவல்களும் இல்லை. நடைபெற்று முடிந்த குழப்பங்களின் சூத்திரதாரிகள் நாட்டின் சட்டத்திற்கும் நீதிக்கும் மதிப்பளித்து ஒதுங்கி விட்டார்கள் என்று சொல்லுவதற்குமில்லை. முஸ்லீம்கள் தங்களுக்கேற்பட்டுள்ள அநியாயங்களைச் சர்வதேச மயப்படுத்தி விடக்கூடாது என்ற அபிப்பிராயத்தை உட்கிடையாகவும் வெளிப்படையாகவும் பேரினவாதிகள் தெரிவிக்கின்றனர். இலங்கை முஸ்லிம் சமூகம் ஜுன் மாத அனுபவத்துடன் தலை சாய்த்து மௌனமாகி விடவேண்டும் என்ற எதிர்பார்ப்பு பேரினவாதிகள் மத்தியில் உள்ளமையை அவர்களால் விடுக்கப்படும் அறிக்கைகள் கூறி நிற்கின்றன. அத்துடன் குறித்த சூத்திரதாரிகளின் அபிப்பிராயமும் விருப்பமும் அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்கள் அமைச்சரவையிலிருந்து அகற்றப்படவேண்டும் என்பதேயாகும் என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே முன்னாள் மாகாணசபை உறுப்பினர் அப்துல் மஜீத் அவர்களும் பேரினவாதிகளின் கோரிக்கையை ஆதரிக்கின்றாரா?

ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப் பிடிப்பதே முஸலீம்களுக்குள்ள ஒரே வழி. அரசியற் கட்சி பேதம், பிரதேச வாதம் என்பவற்றை முற்றாகக் கைவிட்டு நாம் அனைவரும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டிய கட்டாயத் தேவை இன்று ஏற்பட்டுள்ளது. 

அரசு சார்ந்த அமைச்சர்கள், எதிர் திறத்திலுள்ள முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பாரளுமன்ற உறுப்பினர்களுடனும் தமது நடவடிக்கை சம்பந்தமான ஆலோசனைகளையும் பெற்று நமது கூட்டுத் தலைமை செயற்படவேண்டியும் உள்ளது, என்பதும் கருத்தில் கொள்ளப்படவேண்டியதாகும்

முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் முதன்மையானது முஸலீம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலுள்ள பொலிஸ் நிலையங்களில் முஸ்லீம் பொலிஸாரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற விடயமாக ஜனாதிபதியிடம் முஸ்லிம் தலைமைத்துவம் பேச்சுவார்த்தை ஒன்றை நடாத்த வேண்டும். இது முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளின் முதற்படியாக அமையும் என்று முற்போக்கு முஸ்லிம் காங்கிரஸ் கருதுகின்றது.

இன்று முஸ்லிம் பிரதேசங்களில் பேரினவாத அரசியல் நடவடிக்கைகளில் முஸ்லிம்கள் பங்குபற்றுதல் இயன்ற அளவில் மட்டுப்படுத்தப்பட வேண்டும். அரசு சார்பானதாகவோ எதிர்கட்சி சார்பானதாகவோ முஸ்லிம்களாகிய நாம் குழுக்களை ஏற்படுத்திக் கொண்டு இச்சந்தர்ப்பத்தில் அரசியற் பலம் பார்க்கத் தேவையில்லை. நமது பள்ளிவாசல்களை மையமாகக் கொண்டு மார்க்கக் கடமைகளைச் செய்வதற்கும் கலாசார சுதந்திரத்திற்கும் நமது சொத்துக்களுக்கும் பொருளாதார வியாபார நடவடிக்கைகளுக்கும் முழுமையான பாதுகாப்பும் இல்லாதவரை பேரினவாதிகளின் செல்வாக்கிலுள்ள அரசியலில் இரண்டாம் நிலைமையில் நாம் பங்கு கொள்வதைப் பற்றி புனராலோசனை செய்ய வேண்டும் என்பதை இந்நாட்டு முஸ்லிம் தலைவர்களின் 

                                                  சிந்தனைக்குச் சமர்ப்பிக்கின்றோம். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :