ஓரணியில் எதிர்ப்பு- சோபித தேரர், சந்திரிகா, சம்பந்தன், ரணில், பொன்சேகா, ஷிராணி

‘நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்போம்’ என்ற தொனிப்பொருளில் மாதுலுவாவே சோபித்த தேரரின் தலைமையில் கூட்டமொன்று நேற்று கொழும்பில் நடைபெற்றது.

சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கூட்டம் கொழும்பு நகர மண்டப கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், ஜனநாயக கட்சியின் தலைவர் சரத்பொன்சேகா, ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர், முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க, மக்கள் விடுதலை முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைத்துவ சபையின் தலைவரும் எம்.பியுமான கரு ஜெயசூரிய திஸ்ஸ அத்தநாயக்க, ரவி கருணாநாயக்க, கயந்த கருணாதிலக்க, மங்கள சமரவீர, விஜேதாஸ ராஜபக்­ஷ, அசோக அபேசிங்க, சட்டத்தரணிகளான ஜயம்பதி விக்ரமரட்ண, வெலியமுன மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :