அம்மன் சிலையை திருடி தப்ப முயன்ற வாலிபரை மக்கள் பிடித்து மரத்தில் கட்டி வைத்து அடி

துராந்தகத்தில் உள்ள அய்யனாரப்பன் கோயிலில் துர்காதேவி அம்மன் சிலையை திருடி தப்ப முயன்ற வாலிபரை மக்கள் பிடித்து மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர். போலீசார் சென்று அந்த வாலிபரை மீட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே பிரபலமான அய்யனாரப்பன் கோயில் மற்றும் அதன் வளாகத்தில் துர்காதேவி அம்மன் சன்னதியும் உள்ளது. இன்று அதிகாலை 4.30 மணியளவில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் கோயில் பகுதியில் நடந்து சென்றுள்ளனர். 

அப்போது அய்யனார் கோயில் வளாகத்தில் ஒரு வாலிபர் நடமாடிக் கொண்டு இருப்பதை பார்த்தனர். அவரை பிடிக்க சென்ற போது, அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். மக்கள் விரட்டிச் சென்று அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

கோயில் வளாகத்தில் உள்ள 4 அடி உயர துர்காதேவி அம்மன் கல் சிலையை திருட வந்தவர் என்பதும் சிலையை பெயர்த்து எடுத்து தயாராக வைத்திருந்ததும் தெரிந்தது. 

இதையடுத்து, சிலை திருட வந்த நபரை கோயில் வளாகத்தில் உள்ள மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்து உள்ளனர். இந்த தகவல் பரவியதும் கோயில் வளாகத்தில் மக்கள் திரண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதுபற்றி தகவல் கிடைத்ததும் மதுராந்தகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மரத்தில் கட்டப்பட்டு இருந்த வாலிபரை மீட்டு அவரிடம் விசாரித்தனர். மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் முன்னுக்குபின் முரணமாக பேசுகிறார். உண்மையிலேயே அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர்தானா? மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடிக்கிறாரா என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

துர்காதேவி அம்மன் சிலையை திருட முயன்ற வாலிபரை மக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :