அரசில்வாதிகளில் பத்திரிகைகள் மூலமாக அரசியல் பலத்தை காட்டுகின்றனர்-அமைச்சர் ராஜித

ரசில்வாதிகளில் சிலர் பத்திரிகைகள் மூலமாக தமது அரசியல் பலத்தை அதிகரித்து கொள்ள முயற்சித்து வருவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பு பொது நூலகத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியல்வாதிகள் அவ்வாறான முயற்சியில் ஈடுபட்டாலும் இணையத்தளங்கள் மூலம் அரசியல்வாதிகள் வெளியிடும் கருத்துக்கள் அடங்கிய செய்திகள் அதிகளவில் வெளிவருகின்றன.

இந்த செய்திகள் மக்களின் மனங்களுக்கு செல்கின்றன. எனது மகன் தினமும் இணையத்தளங்களில் வெளியாகும் செய்திகளை படிப்பது வழக்கம். அந்த செய்திகள் குறித்து அவர் எனக்கு தெளிவுப்படுத்துவார். செய்தி இணையத்தளங்கள் நாட்டிற்குள் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருவதாக தெரிகிறது.

உண்மையான செய்திகளை இணையத்தளங்களில் மாத்திரமே இன்று படிக்க முடிகிறது. இன்றைய இளைய தலைமுறையினர் புதிய அரசியல் கருத்து பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். இது இணையத்தள செய்திகள் மூலம் தெளிவாகியுள்ளது.

இந்த நிலைமை எங்கு சென்று எந்த இடத்தில் வெடித்து சிதறுமோ என்று தெரியாது. எந்த தலைவருக்கும் நாளைய தினம் பற்றி சிந்திக்க முடியாது. அந்தளவுக்கு இளைய தலைமுறையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

நாம் எமது இளமை காலத்தில் இடதுசாரி கொள்கையுடன் இருந்து வந்தோம். ஒரு காலத்தில் இது இல்லாமல் போனது. தற்போது அது எழுச்சி பெற்று முன்னோக்கி வந்து கொண்டிருக்கின்றது. நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் அதனை தவிர்க்க முடியாது.

இலங்கையில் 1988-89 ஆம் ஆண்டு புரட்சிகளுக்கு முன்னர் இளைஞர்களில் கைகளில் சித்திர கதை பத்திரிகைகளே இருந்தன. புரட்சி நடைபெற்ற போது அவர்களின் கைகளில் துப்பாக்கிகள் இருந்தன. அதன் பின்னர் அவர்களில் கைகளில் துப்பாக்கிகள் இருக்கவில்லை. அது சிறந்தது. கைவிட்ட துப்பாக்கியை மீண்டும் இளைஞர்கள் கையில் எடுக்கக் கூடும்.

இளைஞர்கள் அந்த இடத்திற்கு செல்லும் முன்னர் அதனை தவிர்க்க வேண்டியது இன்றைய ஆட்சியாளர்களுக்கு இருக்கும் பொறுப்பு என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :