அஸ்ரப் ஏ சமத்-
ஹஜ் சம்பந்தமாக உயர் நீதிமன்றத்தில் செரண்டிப் ஹஜ் முகவர்களினால் ஹஜ் கோட்டா பகிர்ந்தளிப்பில் அநீதி இழைக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை வழக்கினை 3வது முறையாக நேற்று விவதாத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கினை விசாரித்த உயர் நீதிமன்ற நீதியரசர்கள-; ஏற்கனவே தயார் செய்த ஹஜ் கோட்டா பட்டியல் உடன் ரத்துச் செய்துள்ளது. அத்துடன் பௌத்த சாசன மத விவகார அமைச்சின் செயலாளர். முஸ்லிம் சமய திணைக்களப் பணிப்பாளரிடம் இவ் அறிவித்தல் விடுக்கப்பட்டது.
கிரிட்டிரியா முறைப்படியும் நியமிக்கப்பட்ட முகவர்களது புள்ளி அடிப்படையிலும் புதிதாதக ஹஜ் கோட்டா பகிர்ந்தளிப்பு பட்டியலை 2 நாட்களுக்குள் தயார் செய்து நீதிமன்றத்திடம் ஒப்படைக்கும்படி பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. மீள எதிர்வரும் ஆகஸ்ட் 1ஆம் திகதி இவ் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
செரண்டிப் ஹஜ் முகவர்களின் செயலாளர் இங்கு கருத்து தெரிவிக்கையில் - அநீதி இழைக்கப்பட்ட எங்களுக்கு உயர் நீதிமன்றம் நீதியைப் பெற்றுத் தந்துள்ளது. ஏற்கனவே பட்டியல் ஜித்தாவுக்கு அனுப்பட்டிருந்தாக அமைச்சர் பௌசி தெரிவித்திருந்தார். உயர் நீதிமன்றத்தில் இடைக்கால தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கையில் எவ்வாறு அவர் பட்டியலை அனுப்ப முடியும். என தெரிவித்தார்.

0 comments :
Post a Comment