புதிதாக நியமனம் பெற்று கடமையாற்றும் கிராம சேவகர்கள் கடமை நேரங்களில் இல்லை

பைஷல் இஸ்மாயில் -

ல்முனை முஸ்லிம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் புதிதாக நியமனம் பெற்று கடமையாற்றும் கிராம சேவகர்கள் தங்களின் கடமை நேரங்களில் தங்களின் அலுவலகங்களில் இருப்பதில்லை எனவும் இதனால் பொதுமக்களுக்கு அவசர தேவைகள் ஏற்படும்போது அதனை பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் இருப்பதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கல்முனைக்குடி 5 ஆம் பிரிவு கிராம சேவகர் பிரிவில் புதிதாக நியமனம் பெற்று கடமையாற்றும் கிராம சேவகர் தனது கடமை நேரத்தில் அவரது அலுவலகத்தில் இருப்பதில்லை எனவும் தனது கடமைகளை சரிவர செய்யத் தவரிவருவதாகவும் இதனால் பொதுமக்கள் தங்களின் தேவைகளை நிறைவு செய்து கொள்வதில் அவஸ்தைப் படுகின்றனர்.

இருந்தும் மிக சிரமத்துக்கு மத்தியில் பொதுமக்கள் குறித்த கிராம சேவகரை சந்தித்தாலும் கூட அதற்குரிய நடவடிக்கைகளை சரிவர பெற்றுக்கொள்வதில் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் குறித்த கிராம சேவகர் அலுவலகத்தில் தங்களின் கடமை நேரங்கள் பற்றிய தகவல்களோ அல்லது பொதுமக்களுக்கு விளம்பரப்படுத்தி அறிவுறுத்தும் விளம்பரப்பலகையோ பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படாத நிலையில் இருப்பதாகவும் பொதுமக்களாகிய நாங்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்று புரியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் நாங்கள் கிராம சேவகர்களை சந்தித்தால் அவர்கள் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்றுகூட தெரியாதவர்களாக கிராம சேவை உத்தியோகத்தர்கள் உள்ளனர்.

இது இவ்வாறிருக்க புதிதாக நியமனம் பெற்று தங்களின் கடமைகளை செய்துவரும் கிராம சேவகர்களுக்கு மிக அனுபவம் வாய்ந்த கிராம சேவகவர்கள் கிராமத்திலுள்ள பொதுமக்களுடன் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் அவர்களின் தேவைகளையும் புரிந்து கொண்டு அவர்களை எவ்வாறு வழி நடாத்த வேண்டும் என்பன பற்றியும் கற்றுக்கொடுக்க வேண்டிய மிக அனுபவம் வாய்ந்த கிராம சேவகவர்கள் அவ்விடயத்தில் தவறிழைத்து வருவதாகவும், அனுபவம் வாய்ந்த கிராம சேவகர்கள் பொதுமக்களிடத்தில் மிக ஒழுங்கீனமாக நடந்து கொண்டு வருவதாகவும் குறித்த பிரிவில் வசிக்கும் பொதுமக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

கல்முனைக்குடி 5 ஆம் பிரிவில் வசிக்கும் பொதுமக்கள் இதுதொடர்பில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தங்களின் தேவைகளை நிறைவு செய்வதற்காக குறித்த பிரிவு கிராம சேவகர் அலுவலகத்துக்கு காலை வேளையில் சென்றும் கூட அவரை அங்கு சந்திக்க முடியாமல் இருப்பதாகவும், கிராம சேவகர்கள் தங்களின் கடமை நேரத்தில் அங்கு கடமையில் இருப்பதில்லை எனவும் இதனால் தங்களின் அவசர தேவைகளை நிறைவேற்ற முடியாமல் போவதாகவும் பொதுமக்கள் மேலும் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பில் குறித்த கிராம சேவகர் எஸ்.ஆர்.பஸ்மிலாவை அவரது கையடக்கத் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு வினவியபோது அவர் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,

தான் மருதமுனை பிரதேசத்தில் வசிப்பதாகவும், தனக்கென கடமை நேரம் காலை 8.30 மணி தொடர்க்கம் காலை 11.30 மணிவரையாகும் எனவும் குறித்த நேரத்தில்தான் தனது கடமைகளை பொதுமக்களுக்கு செய்துவருவதாகவும், ஏனைய நேரங்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் அவசர தேவைகளை நிறைவு செய்வதாக இருந்தால் நான் வசிக்கும் பிரதேசமான மருதமுனைக்கு வந்து செய்துகொள்ள வேண்டும் எனவும் இல்லாவிட்டால் மறுநாள் காலையில்தான் பொதுமக்களின் வேலைகளையோ அல்லது தேவைகளையோ செய்து கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் கேள்வி ஒன்றை தொடுத்தபோது,

பொதுமக்களின் வேலைகளை செய்து கொடுக்க ஒரு நாளைக்கு 3 மணித்தியாலயங்களா உங்களுக்கு ஒதுக்கப்பட்டள்ளது என்று குறித்த கிராம சேவகரிடம் கேட்டபோது, அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆம் அவ்வாறுதான் தனக்கு வேலை நேரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் எனது வேலை நேரம் தொடர்பில் பிரதேச செயலாளரிடமோ அல்லது மாவட்ட வெயலாளரிடமோ நீங்கள் கேட்டுக்கொள்ளலாம் என்று மிக கடினமான முறையில் பதிலலித்தார். அதுமாத்திரமல்லாமல் எனது வேலை நேரத்தையும் என்னிடம் என்ன தேவைகள் முடிப்பதாக இருந்தாலும் நான் சொல்கின்ற மாதிரித்தான் கேட்கவேண்டும் அது மஹிந்தட மகனாக இருந்தாலும் சரியே என்று கடிந்து பேசினார். அதன் பின்னர் எனது தொடர்பை நான் துண்டித்துவிட்டு

இச்சம்பவம் தொடர்பாக கல்முனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கிராம சேவகர்களின் கிராம சேவக நிருவாக உத்தியோகத்தர் முஹம்மட் லாஹிரை தொடர்பு கொண்டு, குறித்த கிராம சேவகர் நடந்து கொண்ட விதம் பற்றியும், குறித்த நபர் நான் கடமையாற்றும் நேரத்தில் அவரது பிரிவில் இல்லாமல் தற்போது மருதமுனை பிரதேசமா அவரது இல்லத்தில் இருக்கின்றார். என்று தெரிவித்ததன் பின்னர், இது தொடர்பில் குறித்த கிராம சேவகரின் அசமந்ததனப் போக்கைப்பற்றி பல தடவைகள் பொதுமக்கள் உங்களிடம் முறையிட்டும் கூட நீங்கள் கண்டு கொள்ளாமல் இருக்கின்றீர்களாமே என்று கேட்டபோது,

கிராம சேவக நிருவாக உத்தியோகத்தர் முஹம்மட் லாஹிர் தெரிவித்த கருத்தாவது, யாராக இருந்தாலும் சரி அரச கடமை புரியும் உத்தியோகத்தர்களை அனுகிச் செல்லவேண்டும் அப்போதுதான் தமது காரியத்தை நிறைவு செய்து கொள்ளலாம். அவர்களுக்கென்று ஒரு நாளைக்கு 3 மணித்தியாலயங்கள் தான் வேலை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது அதுவும் காலை வேளையில்தான். பொதுமக்கள் யாராக இருந்தாலும் எப்பிரிவில் உள்ளவர்களாக இருந்தாலும் அவர்களின் அவசரத் தேவையை நிறைவு செய்து கொள்ளவேண்டும் என்றால் குறித்த பிரிவில் குறித்த கிராம சேவகர்கள் இல்லை என்றால் அவர்களின் இல்லம் சென்றுதான் தங்களின் காரியத்தை நிறைவு செய்துகொள்ளவேண்டும். அதற்காக பொதுமக்களின் கடமையை செய்கின்றோம் என்பதற்காக நாள் முழுவதும் தங்களின் காரியாலயத்தில் இருக்கவேண்டும் என்ற அவசியத் தேவை ஒன்றில்லை என்றார்.

குறித்த பிரதேச செயலக செயலாளரை தொடர்பு கொண்டு மேற்படி சம்பவம் பற்றி தெரிவிக்கையில், பிரதேச செயலாளர் அதற்கு கருத்து கூறுகையில்,

அவர்கள் சொல்கின்ற மாதிரி கிராம சேவகர்களுக்கென்று காலை 8.30 மணி தொடர்க்கம் காலை 11.30 மணிவரை பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பதற்காக தங்களின் காரியாலயத்தில் இருக்கவேண்டும். பின்னர் வெளிக்கள வேலைகளை நிறைவு செய்வதற்காக அவர்களின் பிரிவில் மாலை வரை கடமையில் இருக்கவேண்டும். இவ்வாறுதான் அவர்கள் கடமைகளை செய்து கொள்ளவேண்டும் என்றும் தான் தற்போது லீவில் கண்டியில் இருக்கின்றேன் எதிர்வரும் வாரம் எனது கடமைக்கு வந்து குறித்த கிராம சேவகர் எஸ்.ஆர்.பஸ்மிலாவையும் மற்றும் கிராம சேவக நிருவாக உத்தியோகத்தர் முஹம்மட் லாஹிரையும் விசாரனை செய்து தக்க நடவடிக்கையினை மேற்கொள்வதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

கல்முனைக்குடி பிரதேச பொதுமக்கள் குறித்த சம்பவங்களை சுட்டிக்காட்டி முறைப்பாடு அடங்கிய கடிதத்தின் பிரதிகளை ஜனாதிபதியின் செயலாளர், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண ஆளுனர், கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் மற்றும் முதலமைச்சின் செயலாளர், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர்களுக்கு இவ்விடயம் தொடர்பில் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :