அண்மையில் நமது நிந்தவூர் வங்கி ஒன்றிற்கு சென்ற போது அங்கு நடமுறையிலிருக்கும் ஒழுங்கு விதிமுறைகளை சற்று அவதானிக்க முடிந்ததையடுத்து சில கருத்துக்களை இவ்விடத்தில் பதிவு செய்ய விரும்புகின்றேன்.
நமது ஊர் வங்கிகளை பொருத்தவரையில் ஒழுங்கு விதிமுறைகள் பேணபடுவதென்பது மிகவு அரிதாகவே காணமுடிகின்றது. இது நமது நிந்தவூர் வங்கிகளில் மட்டுமின்றி ஏனைய ஊர்களிலும் இது போன்ற ஒழுங்குயின்மையே கையாளப்படுகின்றதை காணமுடிகின்றது.
அதுமட்டுமின்றி வங்கிகளுக்கு செல்லும் மக்களுக்கு ஒழுங்கான முறையில் வரிசை விதிமுறை எதுவும் அங்கு அமைக்கப்படவுமில்லை.
அதே போன்று அங்கு ஆண், பெண் இருபாலாரும் வெவ்வேறுறின்றி ஒன்றோடோன்ராக வரிசை முறையின்றி ஒருத்தருக்கொருவர் போட்டி போட்டுகொண்டும், சண்டையிட்டுகொண்டும் ஒழுக்கம் பேணபடாமல் நடந்து கொள்வதை காணக்கூடியதாயுள்ளது.
காரணம் நமது வங்கிகளில் ஆண்கள், பெண்கள் வெவ்வேறு வரிசை முறை அமைத்து கொடுக்கப்படவுமில்லை அந்த வகையில் அவ்விடத்தில் ஒழுக்கம் பேணபடாமல் அசெளகரியங்களை எதிர் நோக்கவேண்டிய நிலைக்கு பெண்கள் ஆளாகவேண்டியுள்ளது.
ஆகையால் மக்களாகிய நாமே உணர்ந்துகொண்டு ஒழுங்கான முறையில் செயல்படுவது இவ்விடத்தில் முக்கியமானதொன்றாகும் அத்தோடு வங்கி முகாமைதுவங்கள் இதை உங்கள் கவனத்தில் எடுத்துக்கொண்டு மக்களுக்கு ஒழுங்கான முறையில் வசதிகள் செய்து கொடுப்பதும் அவர்களை ஒழுங்கு முறையில் செயல்பட செய்வதும் வங்கியின் முகாமைத்துவத்தின் கடமையென்பது எனது கருத்து...!!
.jpg)
0 comments :
Post a Comment