எம்.வை.அமீர் -
நிந்தவூர் டைடன்ஸ் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எம்.சீ.எம். றிபாய் அவர்களின் வழி நடாத்தலின் கீழ் கழகத்தின் விளையாட்டுப் பிரிவுத் தலைவர் முபாறக் றிசாட் அவர்களின் தலைமையில் கழக அலுவலகத்தில்நேற்று (23.07.2014) இடம்பெற்றது.
இவ் இப்தார் நிகழ்விற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன், நிந்தவூர் பிரதேச தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர், பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஏ.எஸ்.எம். றியாஸ், இளைஞர் பாராளுமன்ற அமைச்சர்களான ஷாபி, அன்வர் சதாத், கிராம சேவகர்களான ஏ.எம். பலூலுல்லாஹ், எஸ். சித்தீக், அம்பாறை மாவட்ட கபடி பயிற்றுவிப்பாளர் ஏ.எல் அனஸ் அஹமட், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் அவர்களின் இணைப்பாளர் எம். இஷட்.எம். முனீர், நிந்தவூர் விளையாட்டு அபிவிருத்தி மற்றும் சமூக சேவைகள் ஒழுங்கமைப்பின் செயலாளர் ஏ.எம். அன்சார், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்களின் தலைவர், செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் அல் ஹாபிழ் எம்.ரி. சாலிஹீன் அவர்களினால் விஷேட பயான் நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
.jpg)
.jpg)

0 comments :
Post a Comment