ஏ.ஜி.ஏ.கபூர், -
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை -1-1AB Super) மாணவர்கள் கடந்த 20, 21, 22.07.2014 ஆகிய மூனறு தினங்கள் கொழும்பிலுள்ள ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் நடைபெற்ற 09 மாகாணங்களிலுமுள்ள தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட (அகில இலங்கை ரீதியிலான) போஷாக்கு சம்பந்தமான வினா விடைப் போட்டியில் தேசிய மட்ட இறுதிப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று வெற்றியீட்டியதோடு, இன்று அநுராதபுரம் திறப்பன மஹாநாம கல்லூரியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களிடமிருந்து பரிசினைப் பெற்றுக் கொண்ட மாணவச் செல்வங்களுக்கும்,
கடந்த 19.07.2014ம் திகதி ஹட்டன் கொட்டகல கல்விக் கல்லூரியில் நடைபெற்ற நாட்டார் பாடல் போட்டியில் தேசிய மட்ட இறுதிப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்ற மாணவச் செல்வங்களுக்கும் எமது பாடசாலைக்கும், எமது பிரதேசத்திற்கும், கிழக்கு மாகாணத்திற்கும் பெருமையீட்டித் தந்த அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் மனங்கனிந்த வாழ்த்துக்களைத்; தெரிவிப்பதோடு, பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.சஹாப்தீன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் (தேசிய பாடசாலை --1AB Super) பாடசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளரும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான சாமசிறி தேசமானி என்.எம்.நஜிமுத்தீன் (ஜே.பி) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment