பாலஸ்தீன சுரங்கங்களை அழிக்க இஸ்ரேல் உறுதி -சுரங்கங்கள் அழிக்கப்படும்வரை தாக்குதல்

காசாவிலிருந்து இஸ்ரேலுக்குள் ஊடுருவ, பாலத்தீனத் தீவிரவாதிகள் கட்டிய சுரங்கப் பாதைகளை, போர் நிறுத்தம் ஏற்பட்டாலும், ஏற்படாவிட்டாலும், இஸ்ரேல் அழிக்க உறுதியுடன் இருப்பதாக இஸ்ரேலியப் பிரதமர் பின்யாமின் நேடன்யாகு கூறியிருக்கிறார்.

இந்த வேலையை முடிக்க இஸ்ரேலை அனுமதிக்காத எந்த ஒரு போர் நிறுத்தத் திட்டத்தையும் தான் ஒப்புக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார்.

இந்த வேலையை முடிக்க இன்னும் சில நாட்கள் தேவைப்படும் என்று காசாவில் இருக்கும் இஸ்ரேலியப் படைகளின் தளபதி கூறியிருக்கிறார். இதனிடையே, காசாவில் இஸ்ரேலிய வான் தாக்குதல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்களும், இஸ்ரேலியப் பகுதிகளுக்குள் ஹமாஸின் ராக்கெட் தாக்குதல்களும் தொடர்கின்றன.

நான்காவது வாரமாக நடந்து வரும் இந்த இஸ்ரேலிய ராணுவத் தாக்குதல் குறித்து சர்வதேச கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன. உயிர்ச்சேதங்கள் அதிகரித்து வருகின்றன.

காசாவில் 1,300க்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், இவர்களில் பெரும்பாலோனோர் சாதாரண பொதுமக்கள் என்றும் காசா அதிகாரிகள் கூறுகின்றனர். இஸ்ரேலைப் பொறுத்த மட்டில் 56 இஸ்ரேலியப் படையினரும் மூன்று பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :