நம்பிக்கை வெற்றியளிக்கும்

மாணவ பருவம் என்பது எமது வாழ்ந்நாளில் என்றும் மறக்க முடியாத நினைவுகளாகும், அவைகளை காலத்தால் அழிக்க முடியாது. இப்பருவம் தான் எமது அறிவு, கற்பனை, ஆற்றல் மற்றும் நம்பிக்கையினை வளர்க்கும் பருவமாகும். இம்மாணவ பருவத்தில் எமது நடத்தை ஏனையவர்களை கவரக்கூடியதாக இருக்க வேண்டும். வீட்டில் பெற்றோர்களும், சமூதாயத்தில் முதியவர்களும், பாடசாலையில் ஆசிரியர்களும் எம்மை மெச்ச வேண்டும்.

எமது நடத்தை சிறந்த நடத்தையாக மாற வேண்டுமாயின். எமது சிந்தனையில் பாரிய மாற்றம் ஏற்பட வேண்டியிருக்கின்றது, எமது சிந்தனையின் ஆக்கவூர்வமான தத்துவங்களே எமது நடத்தையினை தீர்மானிக்கின்றது.

நான் வைத்தியனாக, இன்ஜினியராக, கணக்காளராக ஓர் உளவளத்துணை ஆலோசகராக வருவதற்கு எமது சிந்தனையே முதல் படியாக அமைந்து விடுகிறது, இதனை அறிகைரீதியான நடத்தை வழிகாட்டல் என்று சொல்வார்கள் (ஊழபnவைiஎந டீநாயஎழைசயட வுhநசயில) இத்தகைய இலட்ச்சியங்களை அடைந்து கொள்வதற்கு முதற்படி எமது சிந்தனையே, இதற்கு எதையும் சாதிக்க முடியும் என்ற உளரீதியான உறுதியான நம்பிக்கையே எம்மை சிறந்த ஆளுமை உள்ளவர்களாக சமூதாயத்தில் உருவாக்கிகாட்டுகின்றது.

மாணவர்களான எமக்கு நம்பிக்கை என்பது மிக மிக முக்கியமாகும், பாடசாலைகளில் சக நண்பர்கள் சிறந்த பெறுபேரினை பெறும் பொழுது நாம் நம்பிக்கை இழந்து விடக்கூடாது. உலகில் கிண்னாஸ் சாதனை புரிந்தவர்களில் பலர் எம்மாலும் சாதனை படைக்க முடியும் என்று முயற்சி செய்தார்கள். ஈற்றில் வெற்றி பெற்றார்கள், எமது நம்பிக்கையினை எமக்குள் இருந்து கொண்டுவருவதற்கு முயற்சி என்ற துடுப்பு மிக அவசியமாகின்றது. மாணவர்களாகிய நீங்கள் உங்களது இலக்கினை அடைந்து கொள்வதற்கு நம்பிக்கை அடிப்படையாக இருப்பதோடு, அதை வெளிக் கொண்டுவருவதற்கு முயற்சி முதுகெழும்பாக இருக்கின்றது.


எமது பாடங்களில் நாம் எந்தளவுக்கு கரிசனை செலுத்துகின்றோம், எமது மேலதிக பாடவிதானங்களில் எந்தளவுக்கு நாம் பயிற்சியை மேற்கொள்கிறோம், என்பது பற்றி மாணவர்களாகிய நாங்கள் சிந்திக்க வேண்டும். இவ்வடிப்படை சிந்தனை எம் இலட்சியத்தில் நம்பிக்கையை ஏற்படுத்த உதவும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :