அதை உண்மையாக்குவது போல் சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது…! சிம்பு நடிப்பில் வளர்ந்து வந்த ’வாலு’ படம் பல்வேறுப் பிரச்சினைகளினால் வருடக்கணக்கில் கிடப்பில் கிடக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இப்படமே ட்ராப்பாகும் சூழ்நிலையில் உள்ளது. கடைசியாக இப்பிரச்சினைகளுக்கு எல்லாம் காரணம் ஹன்சிகா தான் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது இப்படத்தை எப்படியாவது முடித்து வெளியிட முடிவு செய்துள்ளார் தயாரிப்பாளர். விரைவில் இப்படத்தின் பாடல்காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட இருக்கிறது.
அதற்கு முன் வாலு படத்துக்கு பப்ளிசிட்டி செய்ய நினைத்த தயாரிப்பாளர், இதுப்பற்றி நாயகன் சிம்புவிடம் பேச, முதல் கட்டமாக அத்தனை எப்.எம். ரேடியோ நிருபர்களையும் தன் வீட்டுக்கு வரச்சொல்லி இருக்கிறார். சிம்பு சொன்ன நேரத்தில் அவர் வீட்டில் குவிந்தனர் எப்.எம். ரேடியோ நிருபர்கள்.
ஆனால் சிம்பு வீட்டின் காவலாளியோ, உங்களை யார் வரச்சொன்னது? சிம்பு தூங்கிக் கொண்டு இருக்கிறார் என்று எப்.எம். ரேடியோ நிருபர்களை வீட்டிற்குள்ளேயே அனுமதிக்க வில்லையாம். இதனால் சிம்பு வீட்டு வாசலில் காத்திருப்பதை வாலு படத்தின் தயாரிப்பாளருக்கு தெரிவித்தனர் எப்.எம். ரேடியோ நிருபர்கள்.
உடனே தயாரிப்பாளர் சிம்புக்கு போன் பண்ணியிருக்கிறார். ஆனால் போனை எடுக்காமல் சுமார் மூன்று மணி நேரம் கழித்து வெளியே வந்த சிம்பு இப்ப எனக்கு மூடு இல்ல.. போய்ட்டு நாளைக்கு வாங்கப் பாக்கலாம் என்று கூறி இருக்கிறார்.
இதைக்கேட்டதும் எப்.எம். ரேடியோ நிருபர்கள் சிம்பு மீது கோவமடைந்து வீட்டை விட்டு முணு முணுத்துக்கிட்டே சென்றனராம்.

0 comments :
Post a Comment