பூசகரின் பேயோட்டத்தினால் உயிரிழந்த பெண்! - மட்டக்களப்பில் துயர சம்பவம்

மட்டக்களப்பு,வெல்லாவெளி பகுதியில் பூசாரி ஒருவரின் பூசையின்போது பேயோட்டியதால் பெண்னொருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

வெல்லாவெளியினை சேர்ந்த பெண்னொருவர் கடந்த மூன்று மாதமாக மன நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையிலும் வீட்டுக்கு வரும்போது அந்த நோய் மீண்டும் ஏற்பட்டதனால் சோதிடரை நாடியுள்ளார்.

இந்த நிலையில் வீட்டில் சூனியம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த பெண்ணின் வீட்டில் பூசாரி ஒருவரினால் பூசைகள் நடத்தப்பட்டுள்ளது.

எனினும் அந்த பூசையினால் எதுவித பயனும் ஏற்படாத நிலையில் வேறு இடத்தில் இருந்து ஒரு பூசாரி அழைத்துவரப்பட்டு பூசைகள் செய்யப்பட்டுள்ளன.

இதன்போது பெண்ணை வைத்து தலையில் வேப்பிலைக்கட்டினால் தலையில் அடித்து பூசைகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பெண் தலையில் கடுமையாக தாக்கப்பட்டதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறான மூட நம்பிக்கைகள் இன்னமும் தொடர்ந்தவண்ணமே உள்ளதாக சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்தார்.

தெய்வ நம்பிக்கையையினை வைத்து சிலர் பணம் உழைக்கும் நோக்கில் செயற்பட்டுவருவதாகவும் அவ்வாறானவர்களின் வலையில் மிகவும் வறுமைப்பட்டவர்கள் வீழ்வதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வளவோ முன்னேற்றகரமான நவீனத்துமான மருத்துவ முறைகள் இன்று அரச வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மிகவும் பின்தங்கிய பிரதேச மக்கள் மூட நம்பிக்கைகளில் செல்வதை தவிர்த்துக்கொள்ளவேண்டும் எனவும் அந்த சமூக ஆர்வலர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :