பொல்கஹவெலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மைக்ரோ கார் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இந்தத் தொழிற்சாலையினை கடந்த 18 ஆம் திகதி ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
இந்த வைபவத்தில் சிரேஷ்ட அமைச்சரும் பிரதி நிதி அமைசச்ருமான கலாநதி சரத் அமுனுகம, கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இலங்கையில் உதிரிப்பாகங்களை ஒன்றிணைத்து கார்கள் மற்றும் வாகனங்களை நிர்மாணிக்கும் ஒரேயொரு தொழிற்சாலை இதுவாகும்.
இத்தொழிற்சாலையில் மாதாந்தம் 2800 வாகனங்களை பொருத்தக்கூடியதாக இருக்கும் என மைக்ரோ கார் பிரைவேட் லிமிடெட் தலைவர் கலாநிதி லோரன்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தயாரிக்கப்படும் இந்த மைக்ரோ வாகனங்கள் முதற் கட்டமாக பங்காளதேஷுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், நேபாளம், பாகிஸ்தான், மாலைதீவுகள் ஆகிய நாடுகளுக்கும் இவற்றை ஏற்றுமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக லோரன்ஸ் பெரேரா தெரிவித்தார்.
இதேவேளை இத்தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட மைக்ரோ ரக கார் ஒன்றினையும் ஜனாதிபதி செலுத்தினார்.








0 comments :
Post a Comment