-எம்.ஐ.சம்சுதீன்,எம்.வை.அமீர் -
ஜேர்மன் நாட்டு நிதிவியுடன் அம்பாரை மாவட்டத்திலுள்ள ஒரேயொரு உதைபந்தாட்ட மைதானமான மருதமுனை மசூர்மௌலானா விளையாட்டு மைதானத்தின் உதைபந்தாட்ட பயிற்சி நிலையம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
உதைபந்தாட்ட வீரர்களை ஊக்கவிக்கும் நோக்கில் மருதமுனை மசூர்மௌலானா விளையாட்டு மைதானத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கட்டிடங்கள் மற்றும் தேவையான உபகரணங்கள் என்பவற்றை பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளன அதிகாரிகள் உதைபந்தாட்ட பயிற்சி நிலையத்தை நேற்று பர்வையிட்டனர்.
இதன்போது ஜேர்மன் நாட்டை சேர்ந்த சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளன ஆலோசகர் ஹோர்ஸ்ட் கிறேயற் (Horst Kriete) சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளன உதவி தொழில்நுட்ப உத்தியோகத்தர் சமித் இஸ்டேன் மேல் ஆகியோர் கல்முனைக்க்கு வருகை தந்திருந்தனர். இவர்களை அம்பாரை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளன தலைவர் சட்டத்தரணி ஏ.எம்.ரகீப்மற்றும் அம்பாரை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளன பொதுச்செயலாளர் எம்.ஐ.எம்.அப்துல் மனாப் உள்ளிட்ட பிரமுகர்கள் வரவேற்று விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்வது குறித்து உரையாடியது குறிப்பிடத்தக்கது.
.jpg)
0 comments :
Post a Comment