வரிச்சலுகை பிரேரணைக்கு எதிர்ப்பு : ஐ.தே.க. நாளை ஆர்ப்பாட்டம்

மூன்று பெரிய அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு வரிச்சலுகைகளை வழங்கும் பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பு டி.ஆர்.விஜயவர்தன மாவத்தையில் உள்ள கிறவுன் பல்நோக்கு அபிவிருத்தி செயற்திட்டம் அமையவுள்ள இடத்தில், ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை எதிர்ப்பு கூட்டமொன்றை நடத்தவுள்ளனர்.

இந்த பிரேரணை நாடாளுமன்றத்தில் நாளையும் நாளை மறுதினமும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

நாளை காலை 10 மணிக்கு பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.விஜயவர்தன மாவத்தையில் கூடவுள்ளதாக ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

ஏந்தவொரு அவசர நிலைமையையும் எதிர்கொள்ள தயாராக தமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருவதுடன், விளையாட்டு துப்பாக்கி என கூறப்படுபவற்றை கொண்டு வரும் அரசாங்க ஆதரவாளர்களை அவர்கள் எதிர்த்து நிற்பரெனவும் அவர் கூறினார்.

இது போன்ற எதிர்ப்புகளுக்கு கட்சி, மக்களை அணித் திரட்டுமா என கேட்ட போது மக்களை ஆபத்துக்கு உட்படுத்த தமது கட்சிக்கு விருப்பமில்லையென அவர் இதன் போது குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :