கொழும்பில் 22-03-2014 இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இந்த கருத்தை வெளியிட்டார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட பிரதியமைச்சர் பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா,
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு முஸ்லிம் மக்களின் பிரச்சினை தொடர்பாக கதைப்பதற்கு உரிமையில்லை எந்தவொரு தருணத்திலும் முஸ்லிம் மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாது.
தாம் பிரித்தானியாவுக்கு சென்ற போது அங்கு முஸ்லிம் மக்கள் தொடர்பில் புலம்பெயர்ந்தவர்களால் கூடிய கவனம் செலுத்தப்பட்டதாக குறிப்பிட்டார். முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை போலியாக்கி தமது பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு அவரகள் முனைகிறார்கள்.
தமிழீழ விடுதலைப்புலிகளால் முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்ட இன்னல்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னர் எந்தவிதமாக கருத்துக்களையும் வெளியிடவில்லை என்று பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா குற்றம்சுமத்தினார்.

0 comments :
Post a Comment