ஏ.எல்.ஜனூவர்-
அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குற்பட்ட அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் அமைந்துள்ள நீர்த்தடாகம் அண்மைக்காலமாக பராமரிப்பு அற்று மாசடைந்து காணப்படுவதாக பெற்றோர்களும், பழைய மாணவர்களும், பிரதேசவாசிகளும் கவலையடைந்துள்ளனர்.
இந் நீர்த்தடாகம் கடந்த காலங்களில் அழகான முறையில் நீர் நிரப்பி, தாமரை வளர்த்து, மரச் செடிகளை வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது. தற்போது இத்தடாகம் சரியான முறையில் பராமரிக்கப்படாததனால் பாடசாலையின் முன் தோற்றத்தின் அழகுக்கும், பாடசாலைக்கும், ஊருக்கும் அவகொளரவத்தையும் ஏற்படுத்துகின்றது.
எனவே, கல்வியிலும், பௌதீக வளத்திலும் அபிவிருத்தி கண்டிருக்கும் இப்பாடசாலையின் நீர்த்தடாகத்தை அழகிய முறையில் சுத்தம் செய்து பராமரிக்குமாறு பெற்றோர்களும், பழைய மாணவர்களும், பிரதேசவாசிகளும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment