சமுர்த்தி சமுக அபிவிருத்தி மன்றத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு - படங்கள்

 ஏ.ஜே.எம்.ஹனீபா-

ம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பிரதேச செயலக பிரிவின் சமுர்த்தி சமுக அபிவிருத்தி மன்றத்தினால் நிர்மாணிக்கப்பட்ட 12 வீடுகளை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று (23) வைபவ ரீதியாக சம்மாந்துறை சென்னல் கிராமம் -01, மலையடிக்கிராமம்-04, கருவட்டுக்கல் ஆகிய பிரவுகளில் நடைபெற்றது.

சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந்த வைபத்தில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சகாதார சுதேச வைத்தியதுறை கூட்டுறவு சமுக சேவைகள் அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் கலந்த கொண்டார்.
ஏனைய அதிதிகளாக உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப், கணக்காளர் ஏ.எல்.மஹ்றூப், உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார், தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் எம்.பி.எம்.ஹூசைன், அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான ஏ.எம்.தபிக், யூ.எல்.எம்.பஸீர் உட்பட பலர் கலந்த கொண்டனர்.

சமுர்த்தி சமுக அபிவிருத்தி மன்றமானது ஒவ்வொரு வருடமும் இலங்கை சமுர்த்தி அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் சர்வதேச புகைத்தல் எதிப்பு கொடி விற்பனை மூலம் பொற்றுக் கொள்கின்ற நிதியினைக் கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்பாகும் இந்த நிதியிலிருந்து வருடாந்தம் வசதி குறைந்த வீடு வசதிகள் இல்லாத குடும்பங்களுக்கு வீட்டினை அமைத்துக் கொள்வதற்கான வசதிகளை செய்த வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

2013 ஆண்டு சம்மாந்துறைப் பிரதேசத்திலுள்ள 12 கிராம செவகர் பிரவுகளில் இருந்து 12 குடும்பங்களை தெரிவு செய்து தலா ஒருவீட்டுக்கு 160000.00 ஒரு இலட்சத்து அறுபது ஆயிரம் ரூபா செலவில் மொத்தமாக 1920000.00 செலவில் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் இந்த நிகழ்வானது வருமானம் குறைந்த குடும்பங்களின் வாழ்கையில் ஏற்படுத்தப்படுகின்ற ஒரு வரப்பிரசாதமாவதுடன் ஒரு நிரந்தர தர்மமாகும் எனவும் பிரதேச செயலாளர் மன்சூர் கருத்து தெரிவித்ததார்.

இந்த நிலைமையினை அவதானித்த அமைச்சர் மன்சூர் அந்த மக்களின் வாழ்வாதார அபிவிருத்திக்கு உதவும் வகையில் வாழ்வாதார பொருட்களை வழங்குவதற்காக பட்டியல் ஒன்றினை தயாரித்து வழங்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :