உலக நீர் தினம் மார்ச் 17ம் திகதியாகும் அதன் அடிப்படையில் 17ம் திகதி தொடக்கம் 22ம் திகதி வரை உலக நீர் தின வாரமாகக் கொண்டு 'நீர் மற்றும் வலு' எனும் தெனிப்பொறுலில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சு, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை ஆகியன இணைந்து 22.03.2014 சனிக் கிழமை இடம் பெற்றது.
இந் நிகழ்வு இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் பிரதமர் கௌரவ. டி.எம். ஜயரத்ன அவர்களின் தலைமையில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அமைச்சர் கௌரவ. தினேஷ் குணவர்தன அவர்களின் அழைப்பில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பிரதி அமைச்சர் கௌரவ. நிரூமா ராஜபக்ஷ அவர்களின் பங்கு பற்றலில் நடைபெற்ற இந் நிகழ்வில் அதன் தலைவர்,பொது முகாமையாளர், உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், சபை ஊழியர்கள் பங்கு பற்றினர்.
இந் நிகழ்வு முதல் கட்டமாக காலை7.30மணி தொடக்கம் இராஜகிரிய பிரதான வீதியில் இருந்து நடை பவனியாக பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மானாட்டு மண்டபம் வரை சென்று அரங்கிலே ஒன்று கூடி சபையில் 25 வருடம் சேவையாற்றிய சபை ஊழியர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு சபையினால் இடம் பெற்ற சபை காரியாலயங்களை அழகுபடுத்தல் போட்டியில் நேர்த்தியான அழகுபடுத்தலை வெழிப்படுத்திய சபை ஊழியர்களுக்கு நிணைவுச் சிண்ணமும் சான்றிதழும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது அத்தோடு சபையினால் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட மாணவர்களுக்காக நடாத்தப்பட்ட வினா விடைப்போட்யில் தமது ஆற்றலை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு சிண்ணமும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள் இதில் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றது.
.jpg)








0 comments :
Post a Comment