அமைச்சர் றிசாத்திடம் மன்னிப்புக் கேட்கவோ நஷ்ட ஈடு வழங்கவோ மாட்டேன் - ஞானசார தேரர்




வில்பத்துவில் மீளக்குடிமர்த்தப்பட்ட முஸ்லிம் மக்கள் தொடர்பில் பொதுபல சேனா அமைப்பினால் தம்மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் போலியானது என்று கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அவ்வாறான குற்றச்சாட்டுகளால் தமக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு நட்டஈடாக 500 மில்லியன் ரூபாவை கோரியுள்ளார்.

இரண்டு வார காலப்பகுதியினுள் தமக்கான நட்டஈடு வழங்கப்படாவிட்டால் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தம்மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில், தாம் அமைச்சு பதவியில் இருந்து விலகுவதாக அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இந்தவிடயம் தொடர்பாக உமர் செய்தி பிரிவு பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரிடம் வினவியது.

அதற்கு பதிலளித்த அவர், தமது அமைப்பு அமைச்சரிடம் மன்னிப்போ அல்லது நட்ட ஈடோ வழங்க போவதில்லை என்று தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவிடம் உமர் செய்தி பிரிவு வினவியது.


அதற்கு பதிலளித்த அவர், தமது கண்காணிப்புக்கு அமைய தவறு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :