மஹேல, சங்கங்ககார ஓய்வு பெறும் தீர்மானத்தை தனக்கு அறிவிக்காமை குறித்து ஜயசூரிய கவலை



லங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர்களான குமார் சங்கக்காரவும் மஹேல ஜயவர்தனவும் சர்வதேச இருபது20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து தமக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படாமை குறித்து இலங்கைக் கிரிக்கெட் தேர்வுக்குழுவின் தலைவரான சனத் ஜயசூரிய ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷில் நடைபெறும் உலக இருபது20 போட்டிகளின் பின்னர் சர்வதேச இருபது20 போட்டிகளிலிருந்து தான் ஓய்வு பெறவுள்ளதாக மஹேல ஜயவர்தன டுவிட்டர் மூலம் அறிவித்தார். அதேவேளை குமார் சங்கக்கார ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின் மூலம் தனது தீர்மானத்தை அறிவித்தார்.

இது குறித்து சனத் ஜயசூரிய கூறுகையில், நான் அவர்களால் கைவிடப்பட்டதாக மிகவும் உணர்கிறேன். அவர்களிடம் நான் மிக வெளிப்பயாக நடந்துகொண்டிருந்தேன். அவர்களுக்கு தற்காலிக ஓய்வளிப்பதென்றால் கூட நான் அவர்களை அழைத்து என்ன நடக்கிறது என்பதை தெரிவிப்பேன்.

எந்தவொரு சிரேஷ்ட வீரருடனும் நான் சர்ச்சைக்குரிய வகையில் செயற்பட்டதில்லை. சுரேஷ்ட வீரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மதிப்பு மரியாதையை நான் எப்போதும் வழங்கி வந்துள்ளேன்' என சனத் ஜயசூரிய தெரிவித்தள்ளார்.

இலங்கை அணியினர் பங்களாதேஷூக்கு புறப்படுவதற்கு முன்னர் வீரர்களுக்கான கொடுப்பனவுகள் குறித்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கும் வீரர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் நிலவின.

ஆனால், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துடன் அவர்களுக்கு ஏதெனும் பிரச்சினை இருந்தால் அது வேறு கதை. நான் அவ்விடயத்தை இதில் புகுத்த விரும்பவில்லை. ஓரு தேர்வுக் குழுவாக எம்முடன் அவர்களுக்கு எவ்வித பிரச்சினையும் இருக்கவில்லை' என சனத் ஜயசூரிய கூறியுள்ளார்.-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :