இன்றிரவு (21) இரவு ஏழு மணிக்கு ஒளிபரப்பான தேசிய ரூபவாஹினி தொலைக்காட்சியின் ஐ அலைவரிசை தமிழ்ச் செய்திகளைக் கேட்டுக் கொண்டிருந்த போது எனது மனதுக்கு வேதனையான என்னால் ஜீரணிக்க முடியாத ஒரு செய்தியை அதில் ஒளிபரப்பாகியது.
தெளிவில்லாத ஒளிப்பதிவு நாடா, தெளிவில்லாத பேச்சு ஆகியவற்றுடன் ஒளிபரப்பான அந்தச் செய்தி இவ்வாறு அமைந்திருந்தது.
அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்கள் அதில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
'இந்த நாட்டு முஸ்லிம்கள் அரசர்களுக்கு விசுவாசமாக இருந்தார்கள்.. அரசாங்கங்களுக்கு விசுவாசமாக இருந்தார்கள். அரச தலைவர்களுக்கு விசுவாசமாக இருந்தார்கள். ஆனால், இன்று சில முஸ்லிம் அரசியல்வாதிகள் வெளிநாடுகளையும் புலம்பெயர் தமிழர்களையும் திருப்திப்படுத்துவதற்காக ஜெனீவாவில் பிரேரணை சமர்ப்பித்துள்ளார்கள்”
என்ற பொருள்பட அமைச்சர் அதாவுல்லாஹ் தெரிவித்திருந்தார்.
அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்களே! நீங்கள் முஸ்லிம் காங்கிரஸை மனதில் வைத்தே இவ்வாறு தெரிவித்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.
உங்களுக்கு நான் கூறுவது இதுதான்... இன்று இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகம் இக்கட்டானதொரு நிலையில் உள்ளது. இதனை உங்கள் மனட்சாட்சியைத் தொட்டுப் பார்த்தேனும் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறானதொரு நிலையில் இப்படியான அழகான கற்பனைமிக்க, உண்மைக்கு மாறான விடயங்களைக் கூறி முழு முஸ்லிம் சமூகத்தையும் இக்கட்டில் மாட்டி விடாதீர்கள்.
அமைச்சர் ஹக்கீம், முஸ்லிம் காங்கிரஸ் என்ற இரண்டு தனிப்பட்ட விடயங்களை மனதில் கொண்டு எதனையும் நீங்கள் நோக்காதீர்கள். சமூகம் என்ற நிலையில் நீங்கள் சிந்தித்து கருத்துகளை வெளியிடுங்கள்.
சரி, நீங்கள் கூறுவது போல் இன்றைய அரசாங்கம் முஸ்லிம்களுக்குத் துரோகம் செய்யவில்லை. மாறாக முஸ்லிம்களைப் பாதுகாத்து வருகிறது என்று வைத்துக் கொள்வோம். ஆனால், பொதுபல சேனா முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்யவில்லை என்றும் உங்களால் கூற முடியுமா? அப்படிக் கூற உங்களுக்கு மனம் வருமா அமைச்சர் அவர்களே?
நவநீதம் பிள்ளையிடம் முஸ்லிம் காங்கிரஸ் கொடுத்த அறிக்கை அரசுக்கு எதிரான அறிக்கை அல்ல.. பொதுபல சேனா முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில்தான் அதில் அதிகளவில் கூறப்பட்டுள்ளன.
அப்படியெனில் பொதுபல சேனா முஸ்லிம்களுக்கு இழைக்கும் அநியாங்களைக் கூட வெளியில் சொல்லக் கூடாது என்றா நீங்கள் கூறுகிறீர்கள். அவர்களின் அடக்கு முறைக்குள் நமது சமூகம் வாழ வேண்டுமென்பதுதான் உங்கள் கொள்கையா? பொதுபல சேனாவுடனும் முஸ்லிம்கள் விசுவாசமாக இருக்க வேண்டும் என நீங்கள் கூற வருகிறர்களா?
இன்று நீங்கள் வெளியிட்டுள்ள கருத்துகள் நாளை சிங்கள ஊடகங்களில் வெளியிடப்படும் (நிச்சயம் வெளியாகும்) போது அதனால் பாதிக்கப்படப் போவது நீங்கள் அல்ல.. முஸ்லிம் காங்கிரஸ் அல்ல.. ஹக்கீம் அல்ல.. முழு முஸ்லிம் சமூகமே பாதிக்கப்படும். அதிலும் விசேடமாக, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அப்பால் பெரும்பான்மைச் சிங்கள மக்களுடன் ஐக்கியமாக வாழும் முஸ்லிம்களே அதிகம் பாதிப்பினை எதிர்நோக்குவர்.
அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்களே! தனிப்பட்ட வெறுப்பு விருப்புகளை ஒரு பக்கம் வைத்து விட்டு எமது சமூகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு செயற்படுங்கள்.
பொதுபல சேனா அண்மையில் அமைச்சர் ஹக்கீம் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன தொடர்பில் எவ்வாறான கருத்துகளைத் தெரிவித்திருந்தது என்பதனை நீங்கள் அறிவீர்கள்.
அமைச்சர் ஹக்கீம் சிங்கள இனத்திடம் மன்னிப்புக் கேட்காவிட்டால் தங்களால் முன்னெடுக்கப்டும் நடவடிக்கைகளால் முழு முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படும் என்று அது அச்சுறுத்தியுள்ளது.
இவ்வாறானதொரு நிலையில் நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளும் அவர்களுக்கு வலு சேர்த்து எமது சமூகத்தை அவர்கள் அழிப்பதற்குச் சந்தர்ப்பமாகி விடும் . பொல்லைக் கொடுத்து நாங்களே அடி வாங்கத் தேவையில்லை அமைச்சரே!
அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்களே! உங்கள் கால்களில் விழுந்து கெஞ்சிக் கேட்கிறேன் இவ்வாறன கருத்துகளைத் தயவு செய்து நீங்கள் வெளியிட வேண்டாம்.

0 comments :
Post a Comment