மாடுகளை அறுக்கும் அனுமதியை நிபந்தனையுடன் வழங்கிய கல்முனை முதல்வர்



ஏ.ஜே.எம்.ஹனீபா-

ல்முனை மாநகர சபை பிரதேசங்களில் மாடு அறுப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு நேற்று செவ்வாய் நல்லிரவு தொடக்கம் இறைச்சிக்காக மாடுகள் அறுப்பதற்கான அனுமதியினை கல்முனை மாநகர முதல்வர் சட்டமுதுமாணி எம்.நிசாம் காரியப்பர் நிபந்தனையுடன் வழங்கியுள்ளார்.

இது விடயம் தொடர்பான விஷேட அறிவித்தலை முதல்வர் நோற்று (18) மாலை வெளியிட்டார்.

நோய் ஏதும் இல்லை என மிருக வைத்திய அதிகாரியினால் உறுதிப்படுத்தப்பட்ட மாடுகளை மாத்திரமே அறுக்க முடியும் என அந்த அறிவித்தலில் குறிப்பட்டுள்ளார். இந்த நிபந்தனை கண்டிப்பாக அமுல்படுத்தப்படும் எனவும் மாநகர முதல்வர் குறிப்பட்டுள்ளார்.
கல்முனை மாநகர பிரதேசங்களில் இறைச்சிக்காக மாடு அறுப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கடந்த புதன்கிழமை (12) முதல்வர் நிசாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்றது.

கடந்த மாதம் 27ம் திகதி தொடக்கம் அப்பகுதிகளிலுள்ள மாடுகள் தினசரி பரிசோதிக்கப்பட்டதன்; பிரகாரம் பிந்திய ஒருவாரகாலமாக கல்முனை மாநகர சபை எல்லைக்குள் எந்தவொரு மாடும் நோய்த்தாக்கத்துக்கு உட்படவில்லை என அன்றைய தினம் மிருக வைத்திய அதிகாரியினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து கல்முனையில் மாடுகளை வினியோகிக்கும் இடமொன்றுக்கு முதல்வர் தலைமையில் சென்ற அதிகாரிகள் அறுபதுக்க மேற்பட்ட மாடுகளை நேரடியாக பார்வையிட்டு பரிசேதனை செய்தனர் இதன் போது குறித்த மாடுகள் தேக ஆரோக்கியத்துடன் இறுப்பதை அவர்கள் உறுதி செய்தனர்.

இதனைத் தொடர்ந்து இந்நிலவரம் தொடர்பான விரிவான அறிக்கையினை கால்நடை உற்பத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கு கல்முனை நகர முதல்வரினால் அனுப்பி வைத்துள்ளார்.

இதன் பிரகாரம் இன்னும் ஐந்து நாட்களுக்குள் நிலைமையினை நேரில் அவதானித்து இறுதித் தீர்மானத்தை எடுப்பதாக தெரிவித்ததற்கு அமைவாகவும் நோய்த்தாக்கத்துக்குரிய மாடுகள் எதுவும் கண்டறியப்படாததனாலும் மாடுகள் அறுப்பதற்கான இந்த அனுமதியினை வழங்கியுள்ளார்.

இதற்கு அமைவாக இன்று கல்முனைப் பிரதேசத்தில் மாடுகள் அறுக்கப்பட்டு கடைகளில் மாட்டிறைச்சி விற்பனை செய்யப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தககதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :