மக்காவிலிருந்து உம்ரா முடித்து நாடு திரும்புகையில் அந்தமான் தீவுகளுக்கருகே விமானமொன்று கடலில் மூழ்குவதைத் தான் கண்ணுற்றதாக மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் 54 வயது பெண் ஒருவர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
தான் கண்டது ஒரு விமானம் தான் எனக் குறிப்பிடும் அவர் நேரம், காலமும் சொல்வதோடு தன்னை யாரும் நம்பத் தயாராகவில்லையாகினும் தான் கண்டது விமானம் தான் என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளதோடு இது குறித்து காவல்துறையிலும் முறைப்பாடு செய்துள்ளார்.
எனினும் நீண்ட தூர விமானங்கள் பொதுவாக 33,000 – 35,000 அடி உயரத்தில் பறக்கின்ற அதேவேளை அவ்வளவு உயரத்தில் இருந்து (7 மைல்) இதைக் கண்ணுறுவது சாத்தியமற்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த சந்தர்ப்பத்தில் தான் உடனடியாக நண்பர்களிடம் தகவலை சொன்னதாகவும் ஆனாலும் யாரும் நம்பவில்லையெனவும் ராஜா தலேலா ராஜா லதீப் என அறியப்படும் பெண் தெரிவித்துள்ள அதேவேளை மூன்றாவது வாரமாக விமானம் தேடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment