அக்கரைப்பற்றில் 2014க்கான தேசிய வரவு செலவுத் திட்டம் சம்பந்தமான நிகழ்வு - படங்கள்





ஏ.ஜி.ஏ.கபூர், அக்கரைப்பற்று-

க்களின் பங்களிப்பில்லாத அபிவிருத்தித் திட்டங்கள் பூரணமான வெற்றியைத் தராது என்பதோடு மக்கள் நலனை நோக்காகக் கொண்டு செயற்படுத்தும் அபிவிருத்தித் திட்டங்கள் பூரணமானதும் அதனைப் பாதுகாக்கவும் அதனை முறையாகப் பயன்படுத்தவும் பயனாளி மக்கள் முன்வரவேண்டும் என்றும் சரித்திரத்தில் முதன் முறையாக வரவு செலவுத் திட்டமொன்று தயாரிக்கப்படுகின்ற போது மக்களின் குறிப்பாக பயனாளிகளின் தேவைகளையும் அவர்களின் கருத்துக்களும் கேட்டறிந்து திறந்த அடிப்படையில் தயாரித்து முன்வைக்கப்பட்டுள்ளது என்று உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் இணைப்புச் செயலாளரும் சட்டத்தரணியுமான எம்.எம்.பஹீஜ் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொருளாதார அபிவிருத்தியினை இலக்காகக் கொண்ட 2014க்கான தேசிய வரவு செலவுத் திட்டம் சம்பந்தமாக கிராமிய மட்டத்தில் அக்கரைப்பற்று 04ம், 05ம், 06ம் கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள பயனாளிகளுக்கு விளக்குவதோடு, பொருளாதார அபிவிருத்திச்செயற் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பயனாளிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமுக சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தும் நிகழ்வொன்று நேற்று முன்தினம்(21.03.2014) வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று ஹிஜ்றா வித்தியாலயத்தில் நடைபெற்றபோது இந் நிகழ்வில் அமைச்சர் அதாஉல்லவின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேறகண்டவாறு தெரிவித்தார்.


அக்கரைப்பற்று பிரதேச செயலக திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் யூ.எல்.ஏ.ஹஸன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் உதவிச் செயலாளர் எம்.ஐ.சலாகுதீன், அக்கரைப்பற்று மாநகரசபை உறுப்பினர் ஏ.ஜி.அஸ்மி,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.ஏ.பாஹிர், எம்.எல்.அக்பர் அலி, ஏ.எஸ்.எம்.ஹஸ்பி, கிராம உத்தியோகத்தர்களான எம்.ஏ.முனவ்வர், ஜே.அப்துல் காதர், ஏ.எல்.என்.மீராலெவ்வை, மற்றும் பள்ளிவாயல் தலைவர்கள், கிராமஅபிவிருத்திச் சங்கங்களின் தலைவர்கள், சமுக சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகள், பாடசாலை அதிபர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அக்கரைப்பற்று பிரதேச செயலக திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் யூ.எல்.ஏ.ஹஸன் தனது உரையின்போது: பொருளாதார அபிவிருத்தியினை இலக்காகக் கொண்ட 2014க்கான தேசிய வரவு செலவுத் திட்டம் சம்பந்தமாக விளக்கியதோடு, பொருளாதார அபிவிருத்திச்; செயற் திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு பயனாளிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் துறை சார்ந்த நிபுணர்களின் ஒத்துழைப்பும், பூரண பங்களிப்பும் அவசியமெனவும், பூரண பங்களிப்பு இன்றியும், அபிவிருத்தி செயற்றிட்டங்கள் பூரணமானதும் மக்கள் அதனைப் பாதுகாக்க முன்வரவேண்டும் எனவும் தெளிவுபடுத்தினார்.

இறுதியாக அபிவிருத்தித் திட்டங்களை மேற்பார்வை செய்யவும், பூரணப்படுத்தபப்ட்ட செயற்றிட்டங்களைப் பாதுகாக்கவும் கிராம உத்தியோகத்தர் பிரிவு அடிப்படையில் குழுக்களும் அமைக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :