காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுகளில் பொது மக்களின் குறைகளை கேட்டறியும் கூட்டம்



பழுலுல்லாஹ் பர்ஹான்-

ட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 18 கிராம உத்தியோகத்தர் பிரிவில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 2014 ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பிரதேச அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக பொது மக்களின் குறைகளை கேட்டறிந்து அது தொடர்பாக ஆராயும் கூட்டங்கள் காத்தான்குடியில் 6 இடங்களில் பின்வரும் ஒழுங்கில் நடைபெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், பிரதேச செயலாளர்,கிராம உத்தியோகத்தர்,மாகாண சபை உறுப்பினர்கள் ,நகர சபை தவிசாளர் உட்பட அதன் உறுப்பினர்கள் ,பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ,ஊர் பிரமுகர்கள்,பள்ளிவாயல் பிரதிநிதிகள் என பலரும் இதில் கலந்து கொள்ளவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மக்கள் தொடர்பு அதிகாரி றுஸ்வின் தெரிவித்தார்.

இதில் 164,164ஏ,164பி,164சி, ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கான கூட்டம் 31-01-2014 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு காத்தான்குடி -5 அல் ஹிறா வித்தியாலயத்திலும் ,166,166ஏ,167,167ஈ, ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கான கூட்டம் 02-02-2014 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு காத்தான்குடி அந் நாஸர் வித்தியாலயத்திலும் ,165,165ஏ,165பி, ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கான கூட்டம் 02-02-2014 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9 மணிக்கு காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலயத்திலும்,167 பி,167டி, ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கான கூட்டம் 07-02-2014 வெள்ளிக்கிழமை முற்பகல் 8.30 மணிக்கு புதிய காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்திலும்,162,162ஏ,162பி, ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கான கூட்டம் 10-02-2014 திங்கட்கிழமை முற்பகல் 8.மணிக்கு காத்தான்குடி மீரா பாலிகா வித்தியாலயத்திலும்,167ஏ, 167 சி, ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கான கூட்டம் 11-02-2014 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு புதிய காத்தான்குடி பதுறியா வித்தியாலயத்திலும் பின்வரும் ஒழுங்கில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :