எஸ்.எம்.அறூஸ்-
; ஒலுவில் அல்-ஹம்றா மகாவித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர் சமூக சேவையில் மிகுந்த ஆர்வம் கொண்டு பல்வேறு பொது அமைப்புக்களிலும் அங்கத்துவம் பெற்று செயற்பட்டு வருகின்றார்.
சர்வோதய அமைப்பின் கல்முனை மாவட்ட இணைப்பாளராகக் கடமையாற்றும் எம்.எல்.எம்.பாரீஸ் இனநல்லுறவு வேலைத்திட்டங்களில் பிரதான செயற்பாட்டாளராகக் செயற்பட்டு வருகின்றார்.
அம்பாரை மாவட்டத்தில் சர்வோதய அமைப்பின
வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக செயற்படுத்தியுள்ளார்.அத்தோடு சர்வோதய அமைப்பின் பல பதவிகளை வகித்து தற்போது மாவட்ட இணைப்பாளர் என்ற பதவிகை்கு உயர்ந்துள்ளார்.
ஒலுவில் சுப்பர்லக் விளையாட்டுக்கழகத்தின் உபதலைவராகவும், அந்நூர் இளைஞர் கழகத்தின் உப தலைவராகவும் அங்கம் வகித்துள்ள எம்.எல்.எம்.பாரீஸ் முஸ்லிம் இளைஞர் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளருமாவார்.
அதேபோன்று இவரின் சமூகசேவைப் பணியைப் பாராட்டி 2006ம் ஆண்டு இரத்தினபுரியில் நடைபெற்ற அகில இனநல்லுறவு ஒன்றியத்தின் தேசிய வருது வழங்கும் நிகழ்வில் சாம ஸ்ரீ சாம சக்தி விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
மிக இளம் வயதில் சமூக சேவைப்பணியில் ஈடுபட்டு வரும் பாரீஸ் இலங்கையி்ன் பல பிர தேசங்களில் நடைபெற்றுள்ள கருத்தரங்குகள், பயிற்சிப்பட்டறைகள் போன்றவற்றிலும் பங்குகொண்டுள்ளதுடன் அதற்குத் தலைமை தாங்கியும் செயற்பட்டுள்ளார்.
அண்மைக்காலத்தில் ஊடகத்துறைக்குள்ளும் காலடி எடுத்துவைத்துள்ள. இவர் மகக்ள குறைபாடுகளை வெளிக்கொணர்வதில் மிகச்சிறப்பாகச் செய்றபட்டு வருகின்றார்.
ஒலுவில் பிரதேசத்தி்ன் பிரபல சமூக சேவையாளரான எம்.ஏ.மீராலெப்பை மற்றும் வை.எல்.சுபைதா நாச்சி தம்பதிகளின் புதல்வராவார். இவருக்கு ஐந்து சகோதரா்களும், இரண்டு சகோதரிகளும் உள்ளனர். திருமணம் முடித்துள்ள பாரீஸ் ஒரு ஆண் குழ்நதையின் தந்தையுமாவார்.
சமாதான நீதவானாக நியமிக்கப்பட்டதற்கு பல்வேறு பொது அமைப்புக்களும் தமது பாராட்டு்க்களைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
.jpg)
0 comments :
Post a Comment