ஓட்டமாவடி சமூர்த்தி வங்கிக் காரியாலயமானது உடைக்கப்பட்டு சேதம்.

குகதர்ஷன் -

ட்டமாவடி  கோறளைப் பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்கான சமூர்த்தி வங்கிக் காரியாலயமானது புதன்கிழமை இரவு இனம்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி வங்கி முகாமையாளர் என்.ஜெயசீலன் தெரிவித்தார்.

இதுதொடர்பில் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு வீதி; தியாவட்டவான் தாண்டியடியில் அமைந்துள்ள வங்கி சங்கத்தின் வேலி மற்றும் முன்பக்க கதவினை உடைத்து உட்சென்றவர்கள் காசு வைக்கும் இரும்பு பெட்டியை உடைப்பதற்கு முயற்சித்துள்ளதுடன், அலுமாரிகள் மற்றும் அலுவலக மேசைகள் போன்றவற்றை சேதமாக்கியுள்ளதாகவும் முகாமையாளர் மேலும் தெரிவித்தனர்.

எனினும் வங்கியில் இருந்து எந்தப் பொருட்களும் திருடப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :