ஆறு மாதங்களுக்குள் ஏறாவூரில் பாரிய ஆடைத்தொழிற்சாலை உருவாகிவிடும் - ஹாபிஸ் நசீர்

என்.குகதர்ஷன்-

டுத்து வரும் ஆறு மாதங்களுக்குள் ஏறாவூரில் பாரிய ஒரு ஆடைத்தொழிற்சாலை உருவாகிவிடும். அது 50 இயந்திரங்களை கொண்டு வேலைகளைத் துவங்கும். அதன் மூலம் இந்தப் பிரதேசத்திலுள்ள ஏராளமான தமிழ், முஸ்லிம், சிங்கள இளைஞர் யுவதிகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புக் கிட்டும். இதற்கான சகல ஏற்பாடுகளும் முற்றுப்பெற்று விட்டன என கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி அபிவிருத்தி அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இந்த ஆடைத்தொழிற்சாலையை ஆயிரக்கணக்கானோர் ஆடை உற்பத்தித் தொழிலில் ஈடுபடுகின்ற ஒரு உற்பத்தி வேலைக்களமான மாற்றுவதற்கு உங்களது ஒத்துழைப்புத் தேவை என்று அவர் தெரிவித்தார்.

ஏறாவூரில் தெரிவு செய்யப்பட்ட 10 வறிய குடும்பங்களுக்கு கூரைத் தகடுகளும், வாழ்வாதார உதவிகளும் வழங்கும் நிகழ்வு அமைச்சர் நஸீர் அஹமட்டின் இணைப்புச் செயலாளர் எம்.எஸ்.அபுல்ஹஸன் தலைமையில் ஏறாவூர் சிறுகைத் தொழில் பேட்டையில் புதன்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உயைராற்றிய அவர்.

நாம் எதிர்பார்ப்புக்களோடு சொந்தக்காலில் நிற்பதற்கு கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற வளங்கள் தாராளமாகப் போதுமானது. இந்த வளங்களை நாம் சரியான நுணுக்கத்துடன் பயன்படுத்தினால் நாம் அனைவரும் தொழில் வல்லுனர்களாக மாற முடியும்.

இங்கிருக்கின்ற ஆற்றல் மிக்க ஒவ்வொரு பெண்ணும் ஒரு ஆடைத் தொழிற்சாலையை நடத்திச் செல்;கின்ற தொழிலதிபர்களாக மாறாம். வெறுமனே செயலற்று எதிர்பார்ப்புகளோடு இருந்தால் ஒன்றுமே நடந்து விடாது. அதற்கு விடாமுயற்சியும் நம்பிக்கையும் ஆற்றலும் வேண்டும்.

இதனை நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள். இங்கே இந்தத் தொழில் பேட்டையில் செயற்படுத்தப்படுகின்ற 11 வகையான தொழிற்துறைகளையும் நடத்திச் செல்கின்ற தொழிலதிபர்களாக நீங்கள் மாறுவதற்கு திடசங்கற்பம் கொள்ள வேண்டும்.

வெறுமனே பயிற்சியையும் கொடுப்பனவுகளையும் பெறும் ஒருவராக மட்டும் நீங்கள் இருந்து விட்டுப் போகக்கூடாது. வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் இந்த ஆடைத் தொழிற்சாலையில் முதலீடு செய்ய விருக்கின்றார்கள். என்றார்.

உணவு பதனிடல் உபகரணம், சூரியசக்தி உபகரணமும் என்பன இதன்போது வழங்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :