திருமண நாளை கொண்டாட சென்ற பெண் கணவன் கண் முன்னே பலி

தா
ய்லாந்தில் திருமண நாளை கணவருடன் கொண்டாட சென்றிருந்த இந்திய பெண் ஒருவர் சாகச விளையாட்டில் ஈடுபட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தியாவை சேர்ந்த 36 வயது பெண் ஷில்பி அகர்வால். இவர் தனது கணவருடன் திருமண நாளை கொண்டாடுவதற்காக தாய்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அப்போது அங்குள்ள பட்டாயா நகர கடற்கரையில் பாராசெய்லிங் விளையாட எண்ணிய இந்த ஜோடி, அதற்காக ஒரு ஸ்பீட்போட்டை வாடகைக்கு எடுத்தனர்.

முதலில் ஷில்பி பாராசூட்டில் பறக்க, அந்த பாராசூட்டை விரைவாக சென்ற படகு கயிறு மூலம் இழுத்து சென்றது. ஆனால் ஒரு கட்டத்தில் பாராசூட்டிலிருந்து ஷில்பி கடலில் விழுந்து விட்டார்.

கடலில் தத்தளித்த ஷில்பியை மீட்க, பின்புறமாக வேகமாக சென்ற படகின் அடியில் உள்ள இறக்கையில் சிக்கி படுகாயமடைந்து அவர் பலியானார்.

இதுதொடர்பாக படகை ஓட்டியவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது, இதற்காக இவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :