ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி சந்தித்து பேசியுள்ளார்.
பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான லாலுபிரசாத் யாதவ் கடந்த 90களில் மாநில முதல்வராக இருந்தபோது கால்நடை துறையில் மாட்ட தீவனம் வாங்கியதாக ரூ.950 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றது.
இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி மொத்தம் 61 வழக்குகளை தாக்கல் செய்தது. இதில் சில வழக்குகள் பீகார் மாநிலத்திலும் சில வழக்குகள் பீகாரிலிருந்து பிரிக்கப்பட்ட ஜார்கண்ட் மாநிலத்திலும் நடைபெற்று வந்தன.
லாலு பிரசாத் யாதவ் மீது மொத்தம் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் ஒரு வழக்கில் லாலுவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 25 லட்சம் அபராதமும் விதித்து ராஞ்சி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனைத் தொடர்ந்து ராஞ்சியில் உள்ள மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். சிறையிலிருக்கும் அவரை ராம்விலாஸ் பஸ்வான் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி நேற்று மாலை லாலுவை சிறையில் சந்தித்து சுமார் அரை மணி நேரம் பேசியுள்ளார். மரியாதை நிமித்தம் லாலுவை சந்தித்ததாக வெளியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
லாலு பிரசாத் யாதவ் மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகிறார்.அவரை காப்பாற்றுவதற்காக மத்திய அரசு அண்மையில் சுப்ரீம் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அவசர சட்டம் கொண்டு வந்தது ஆனால் இந்த சட்டத்தில் உடனடியாக கையெழுத்திட ஜனாதிபதி மறுத்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி எதிர்ப்பை தொடர்ந்து அவசர சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற்றது. ஆனால் அவசர சட்டம் வாபஸ் பெற ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிதான் முக்கிய காரணம் என பாஜ தலைவர் எல்.கே.அத்வானி கருத்து தெரிவித்தார்.
இந்நிலையில் பிரணாபின் மகன் லாலுவை சிறையில் சந்தித்து ஆறுதல் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.(லசி)

0 comments :
Post a Comment