
அடிப்படை உரிமைகள் இன்றி, அற்ப சலுகைகளுக்குச் சோரம் போகாது உலக ஆசிரியர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது!
ஒக்டோபர் 06ஆம் திகதிய உலக ஆசிரியர் தினம் இலங்கையிலும் கொண்டாடப்பட விருக்கின்றது. இதற்கான ஏற்பாடுகளை 2011/23 ஆம் இலக்கச் சுற்றறிக்கை மூலம் கல்வி அமைச்சு, பாடசாலைகளில் இருந்து ஆரம்பித்து மேற்கொண்டு வருகின்றது.
அதன் தேசிய தின நிகழ்வின் போது அதிபர்,ஆசிரியர்கள் விருதுகள் வழங்கி, பாராட் டிக் கௌரவிக்கப்பட விருக்கின்றனர்.
சேவைப் பிரமாணக்குறிப்பு, பதவி உயர்வு, சம்பள உயர்வுகளை பல வருடங்களாக வழங்காது ஏமாற்றிவரும் அரசு, இந்த நிகழ்வின் போது வழங்கவிருக்கும் அற்ப சலுகைகள், பாராட்டுக்கள் மற்றும் விருதுகளுக்கு மயங்கி, சோரம் போகாது, உலக ஆசிரியர் தினத்தை துக்கதினமாக அனுஷ;டிக்குமாறே இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
2008.09.08ஆம் திகதிய உயர்நீதிமன்றத் தீர்ப்பின்போது இணங்கிக் கொண்டதற்கமைய 2008.07.01முதல் அமுலாக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட இலங்கை ஆசிரியர் மற் றும் அதிபர் சேவைகளுக்கான புதியசேவைப் பிரமாணக்குறிப்பு இதுவரை அமுலுக்குக் கொண்டு வரப்படவில்லை.
மாறாக 28ஃ2010ஆம் இலக்கச் சுற்றறிக்கை மூலம் அமுலாக்கும் திகதியை 2011.01.01 முதல் என்று பிற்போட்ட அரசு, 2013 ஒக்டோபர் ஆகியும் அரசசேவை ஆணைக்குழு 2013.04.26இல் அங்கீகரித்த புதிய பிரமாணக் குறிப்பை இதுவரை வெளியிடவில்லை.
அரசாங்க சேவையில் உள்ள சேவைப் பிரமாணக் குறிப்புக்கள், ஆட்சேர்ப்பு நடை முறைகள்,மற்றும் பதவியுயர்வுத் திட்டங்;களைத் திருத்தும் நோக்கில் அரச நிர்வாக அமைச்சு வெளியிடப்பட்ட 25/2011ஆம் இலக்கச் சுற்றறிக்கை மூலம், 6/2006 ஆம் இலக்கச்சுற்றறிக்கையின் பிரகாரம்,இவை உடனடியாகத் தயாரிக்கப்படல் வேண்டும், எனவும், 2011.12.31க்கு முன் அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதி பெறப்படல் வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து 25/2011(i) ஆம் இலக்கச் சுற்றறிக்கை மூலம், அனுமதி பெறும் திகதியை 2012.06.30 ஆகத்திருத்திய அரசு, 02ஃ2012சுற்றறிக்கை மூலம் அதனை மீளவலியுறுத்தியுமிருந்தது. ஆயினும் இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமாணக்குறிப்பை இத்தினத்திற்குப் பின்பே அனுமதித்துள்ளது.
மேலும் உயர் நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டு இரண்டாவது நாளில் உயர்கல்வி மற்றும் தொழிற்றகைமையை அடிப்படையாகக் கொண்டு. துரித பதவிஉயர்வு என்ற தலைப்பில் 2008.09.10இல் ஊடக விளம்பரம் ஒன்றை வெளியிட்டு, அதிபர்,ஆசிரியர் களின் மிதமிஞ்சிய அபிமானத்தைப் பெற்றுக் கொண்ட அரசு, அதனை 6ஃ2006(ஏஐஐஐ) ஆம் இலக்கச் சுற்றறிக்கையாக 2010.01.05இல் வெளியிட்டிருந்தது.
சேவைப் பிரமாணக்குறிப்பு வெளியிடப்படாமையினால் இதுவரை அச்சுற்றறிக்கை ,அமுல் செய்யப்படாமல் கிடப்பில் உள்ளது. இந்தச்சேவைப் பிரமாணக்குறிப்பு தொடர்பில் 2011. 09.22இல் தொழிற்சங்கங்களின்; அபிப்பிராயமும் பெறப்பட்டிருந்தது.
பிரமாணக்குறிப்பை வெளியிடாது காலம் கடத்திவரும் அரசு, 2005/04 சுற்றறிக்கைக் கமைவான பதவி உயர்வுக்காக 2011ஃ30 சுற்றறிக்கையை வெளியிட்டு,பதவி உயர்வு வழங்கும் இறுதித் திகதியை 2010.12.31ஆக மட்டுப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உயர்கல்வி மற்றும் தொழிற்றகைமையை அடிப்படையாகக் கொண்டு, துரிதபதவி உயர்வுக்குத்தடையை ஏற்படுத்தியுள்ள அரசு, 2011.01.01க்குப்பின்னரான பதவிஉயர் வையும் மறுத்து வருகின்றது.
இலங்கை ஆசிரியர் சேவை தாபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வெளிவந்த 2/97 சுற்ற றிக்கை மூலம் தோற்று விக்கப்பட்ட சம்பள முரண்பாட்டுக்குத் தீர்வுகாணக் கோரி, நடாத்தப்பட்ட போராட்டத்தின் விளைவாக, வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பிற்கமைய, ஆசிரியர் சம்பள முரண்பாட்டுக்குத் தீர்வு – குறுகிய காலம் மற்றும் நீண்டகால பிரதிலாபங்கள் என்ற ஆரவாரத்துடன் வெளிவந்த 6ஃ2006(ஏஐஐஐ)ஆம் இலக்கச் சுற்றறிக்கை இன்னும் கிடப்பிலேயே இருக்கின்றது.
இந்நிலையில், 6/2006சுற்றறிக்கை மூலம் முரண்பாட்டைத் தீவிரமடையச் செய்துள்ள அரசு, 6/2006 (ஐஏ) சுற்றறிக்கை மூலம் சம்பளப்படியேற்றப் பெறுமதிகளை அதிகரித் தல் என்ற பெயரில் சம்பள ஏற்றங்கனின் எண்ணிக்கைகளைக் குறைத்தும் சாதனை படைத்துள்ளது. இந்த ஒவ்வொரு நடவடிக்கைகளின் மூலமும் அதிபர், ஆசிரியர் களுக்குச் சேர வேண்டிய பலகோடி ரூபாய்களை அரசு சுருட்டிக் கொண்டுள்ளது என்பது மட்டும் உண்மையாகும்.
இத்தனை அடிப்படை உரிமைகளையும் பறித்துள்ள அரசு, வழங்கும் எந்தவொரு பரிசையும் தன்மானமுள்ள எந்த ஒரு அதிபரும், ஆசிரியரும் ஏற்றுக்கொள்ள மாட் டார் என சங்கம் திடமாக நம்புகின்றது. அந்த வகையிலேயே இந்தப்பரிசளிப்பு பம் மாத்துக்குச் சோரம்போக வேண்டாம் எனவும், உலக அசிரியர் தினத்தை துக்க தினமாக அனுக்ஷ்டிக்குமாறும் அனைத்து அதிபர் ஆசிரியர்களையும் சங்கம் கேட்டுக் கொள்கின்றது.
0 comments :
Post a Comment