சிசுவை பொலித்தீன் பையில் சுற்றி வாழைத்தோட்டத்தில் புதைத்த தாய் - படங்கள்

பிரசவமான சிசுவை பொலித்தீன் பையொன்றில் சுற்றி வாழைத்தோட்டத்தில் புதைத்த தாயை பதுளை பொலிஸார் கைது செய்து பதுளை அரசினர் மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர்.

பதுளை கிறேக்மோர் பெருந்தோட்டத் தொழிலாளியான 44 வயது நிரம்பிய தாய் ஒருவரே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவராவார்.

பதுளை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலொன்றினை அடுத்து விரைந்த பொலிஸார் மேற்படி கிறேக்மோர் தோட்டத்தில் வாழை மரங்கள் நாட்டி வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து புதைக்கப்பட்டிருந்த சிசுவை மீட்டுள்ளனர்.

இதன் பின் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்பே சிசுவின் தாயென்று கருதப்படும் பெண் தொழிலாளியை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பெண் பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது நீதிபதி அப்பெண்ணை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

இந்நிலையில் குறித்த பெண் நோய் வாய்ப்பட்டிருப்பதால் பொலிஸ் பாதுகாப்புடன் பதுளை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :