போதை கலந்த உணவு வகைகளை கொடுத்து பணம் மற்றும் உடைமைகளை திருடும் கும்பலைச் சேர்ந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலியான பெயர்களில் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு, இவர்கள் மோசடியில் ஈடுபட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
வத்தளை, அனுராதபுரம் மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் இந்த சந்தேகநபர்கள் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் போதையூட்டும் ஒருவகை உணவை உண்ணக்கொடுத்து ஒருவரிடமிருந்த உடைமைகளை இந்த சந்தேகநபர்கள் அண்மையில் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதன் பின்னர் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

0 comments :
Post a Comment