பெற்ற பிள்ளையை பட்டினி போட்டு கொன்ற தாய் - பரபரப்பு சம்பவம்

போதைக்கு அடிமையான தாய் ஒருவர் பெற்ற பிள்ளையை பட்டினி போட்டு கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் வடபகுதியில் பிராட்ஃபோர்ட் பகுதியை சேர்ந்தவர் அமண்டா ஹூட்டன்(வயது 43).

மதுபழக்கத்துக்கு அடிமையான அமண்டா, கணவருடன் சேர்ந்து வாழாமல் தனியாக வசித்து வந்தார்.

தினமும் குடித்து விட்டு போதையில் தூங்கிவிடும் அமண்டா, மகன் ஹம்ஷா கானுக்கு சாப்பாடு கொடுக்கமலேயே இருந்துள்ளார்.

இதனால் பசியால் வாடிய கான், நாளடைவில் படுத்த படுக்கையாக மாறி கடந்த 2009ம் ஆண்டில் இறந்து விட்டான்.

மகன் இறந்ததை வெளியே சொல்லாமல், 2 வருடமாக நறுமண தைலம் பூசி அட்டைப் பெட்டி ஒன்றில் அடைத்து வைத்துள்ளார்.

இருப்பினும் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசவே அக்கம் பக்கத்தினர் பொலிசில் புகார் கொடுத்தனர்.

இதனையடுத்து பொலிசார் நடத்திய அதிரடி சோதனையில் உண்மை தெரியவரவே, அமண்டா கடந்த 2011ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு லண்டன் பிராட்ஃபோர்ட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ரோஜர் தாமஸ், அமண்டா ஹூட்டன் குழந்தைக்கு தான் செய்ய வேண்டிய கடமையில் இருந்து தவறி விட்டார். போதைக்கு அடிமையான அவர் குழந்தைக்கு சரியாக உணவு கொடுக்கவில்லை.

இதனால் குழந்தை இறந்திருக்கிறது, குழந்தைக்கு அணிவித்திருந்த உடைகளை பார்க்கும்போது 6 முதல் 9 மாத குழந்தையாக இருக்கும் என்று தெரிகிறது.

குழந்தையை சரியாக வளர்க்காமல் பட்டினியால் சாகடித்த குற்றத்திற்காக 15 ஆண்டு சிறை தண்டனை விதிக்கிறேன் என தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :