மகனுடன் சேர்ந்து அக்கா, தங்கையை கற்பழித்த ஆசாராம்! - மீண்டும் சர்ச்சை

ல்வேறு ஆசிரமங்கள் நடத்தி வந்த ஆசாராம் சாமியார் மீது மேலும் ஒரு கற்பழிப்பு வழக்கு பதியப்பட்டுள்ளது.

பல ஆயிரம் பேர் பின்பற்றி வந்த ஆசாராம் சாமியார் மீது கடந்த செப்டம்பர் மாதத்தில் ஒரு இளம்பெண், ஆசாராம் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறிய புகாரின்பேரில் கைது செய்யப்பட்டு தற்போது ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவரது ஜாமின் மனுக்களும் பல முறை தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.

இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த 2 பெண்கள், சாமியார் மீது ஒரு புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரில், நானும் எனது தங்கையும் சாமியாரின் வழியை பின்பற்றி வந்தோம். ஆமதாபாத் ஆசிரமத்தில் வைத்து தன்னை சாமியார் பலவந்தப்படுத்தி கற்பழித்தார்.

எனது தங்கையை சூரத்தில் சாமியாரின் மகன் நாராயண்சாய் கற்பழித்தார். இவர்கள் மீது புகார் கொடுக்க அச்சம் காரணமாக நாங்கள் காலம் தாழ்த்தினோம் என்று கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சூரத் பொலிசார் எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து நடக்கும் விசாரணையில் சாமியார் மகனும் கைது செய்யப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே சிறையில் இருக்கும் அசராமுக்கு இது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :