கிரிக்கெட் வரலாற்றில் 50,000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரராக சச்சின்

கிரிக்கெட் வரலாற்றில் 50,000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை சச்சின் டெண்டுல்கர் சற்றுமுன் தன்வசப்படுத்தியுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் சம்பியன்ஸ் லீக் இருபதுக்கு 20 போட்டிகளின், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் 26 ஓட்டங்களை எடுத்தபோதே அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதன்படி டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளில் இவர் ஒட்டுமொத்தமாக 50,000 ஓட்டங்களைக் கடந்துள்ளார்.

கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான சச்சின், 198 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 15837 ஓட்டங்களை விலாசியுள்ளார். அத்துடன் 463 ஒருநாள் போட்டிகளில் 18426 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :